அமெரிக்காவில் ராமர் பற்றி சர்ச்சை பேச்சு; ராகுல் காந்தி மீது வழக்கு!

Published : May 13, 2025, 05:28 PM IST
Rahul Gandhi

சுருக்கம்

ராகுல் காந்தி அமெரிக்க பல்கலைக்கழகத்தில் ராமரை புராண கதாபாத்திரம் என்று கூறியதால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சியும் சேர்க்கப்பட்டு, மே 19ஆம் தேதி விசாரணை நடைபெறும்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்க பல்கலைக்கழகத்தில் ராமரை ஒரு புராண கதாபாத்திரமாக வர்ணித்து பேசியிருப்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என திங்கள்கிழமை உ.பி,. நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் (AICC) ஒரு தரப்பாக சேர்க்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் மே 19ஆம் தேதி இந்த வழக்கில் விசாரணை நடந்தத் திட்டமிட்டுள்ளது.

ஏப்ரல் 21 அன்று அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் போது, ​​ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகவும், அது சனாதனத்தைப் பின்பற்றுபவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வெறுப்புப் பேச்சு என்றும் புகார் அளித்த வழக்கறிஞர் ஹரிசங்கர் பாண்டே குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சை உள்ளூர் செய்தித்தாள் மூலம் தான் படித்ததாகவும் பாண்டே தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தி ராமர் மற்றும் அந்தக் காலக் கதைகளை புராணக் கதைகள், கற்பனைக் கதைகள் என்றும் குறிப்பிட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரிசங்கர் பாண்டேயின் இந்த மனு எம்.பி-எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் தலைமை நீதித்துறை நடுவர் நீரஜ் குமார் திரிபாதியிடம் அளிக்கப்பட்டது. நீதிமன்றம் புகாரை ஏற்றுக்கொண்டு மே 19ஆம் தேதி விசாரிப்பதாகக் கூறியது என பாண்டே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி மற்றும் உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் பாண்டே கூறினார்.

பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 196, 351, 353 மற்றும் 356 ஆகியவற்றின் கீழ் ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று ஹரிசங்கர் பாண்டே தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!