டாடா SIA ஏர்லைன்ஸ் நிறுவனத்தை ஏர் இந்தியாவுடன் இணைக்க CCI எனப்படும் Competition Commission of India இன்று வெள்ளிக்கிழமை அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
டாடா SIA ஏர்லைன்ஸ், அதாவது டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாக செயல்படும் விஸ்தாரா விமான சேவை நிறுவனம் தற்போது இந்திய ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே TATA மற்றும் Vistara நிறுவனத்தில் இருந்த வந்த சந்தை இழப்பு காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டாடா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இடையேயான 51: 49 கூட்டு முயற்சியான விஸ்டாராவுடன், கடந்த ஆண்டு டாடா குழுமம் எடுத்துக்கொண்ட ஏர் இந்தியாவின் திட்டமிட்ட இணைப்பை CCI ஆய்வு செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
undefined
இணைக்கப்பட்ட இந்த விமான நிறுவனம், உள்ளூர் போட்டியாளரும், தற்போது சந்தையின் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் இண்டிகோவுக்கு ஒரு சவாலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஒருங்கிணைப்பு, 218 விமானங்களைக் கொண்ட இந்தியாவின் முன்னணி உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சேவை நிறுவனமாக மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே போல இந்த இணைப்பிற்கு பிறகு இது இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச விமானசேவை நிறுவனமாக மற்றும் இரண்டாவது பெரிய உள்நாட்டு விமான சேவை நிறுவனமாக மாறும் என்று விமான நிறுவனம் இணைப்பு தொடர்பான அறிவிப்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. "இணைப்பு பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக, SIA ஏர் இந்தியாவில் ரூ. 2,059 கோடி முதலீடு செய்யும். மேலும் இந்த ஒருங்கிணைப்புக்குப் பிறகு, ஏர் இந்தியாவில் 25.1% பங்குகளை SIA தன் வசம் வைத்திருக்கும்" என்றும் இணைப்பு அறிவிப்பின் போது டாடா குழுமம் தெரிவித்தது.
ஏர் இந்தியா-விஸ்டாரா இணைப்பு ஏப்ரல் 2024 க்குள் அனைத்து ஒழுங்குமுறை ஒப்புதல்களையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விஸ்தாரா தலைமை நிர்வாக அதிகாரி வினோத் கண்ணன் கடந்த மாதம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த 2023 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், இண்டிகோவின் சந்தைப் பங்கு 58% ஆகவும், ஏர் ஏசியா இந்தியா உட்பட டாடா குழும ஏர்லைன்ஸ் பங்கு 25% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
விலை ரொம்ப கம்மி.. சூப்பரான அம்சங்கள்.. ரூ.2000க்கும் கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட் வாட்ச் லிஸ்ட் இதோ !!