கோவாவின் பனாஜி பகுதியில் 22 வயது இளைஞன் ஒருவர், தன் காதலியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, அந்த சடலத்தை மறைத்த நிலையில், போலீசார் அந்த நபரை இன்று கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரகாஷ் சுஞ்ச்வாட் என்ற அந்த 22 வயது நபர், தனது காதலி காமக்ஷி நாயக்கை (30) கடந்த வியாழன் அன்று போர்வோரிமில் உள்ள அவரது வீட்டில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து அவரைக் கைது செய்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் ஊடங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
என்ன நடந்தது?
கோவாவில் வசித்து வரும் பிரகாஷ் சுஞ்ச்வாட் என்ற 22 வயது வாலிபர் ஒருவருக்கும் அவரது காதலியான காமக்ஷி நாயக் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அவர் நேரடியாக போலீசாரிடம் சென்று பிரகாஷ் குறித்து புகார் செய்துள்ளார். உடனே பிரகாஷை அழைத்த போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து காதலி மீது கோபம் கொண்ட அந்த இளைஞன், அடுத்த நாள் காலை அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரிடம் மீண்டும் வாக்குவாதலில் ஈடுபட்டு, இறுதியில் தன்னிடம் இருந்த கத்தியால் பலமுறை அவரை குத்தி பிணமாகியுள்ளார். உடனே தான் செய்த கொலையை மறைக்க, அந்த நபர் அப்பெண்ணின் சடலத்தை ஒரு காரில் ஏற்றியுள்ளார்.
அதிர்ந்த போலீசார்
அந்த இளைஞர் தான் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் பயணம் செய்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு இடத்தில் அந்த பெண்ணின் உடலை தூக்கி எறிந்துவிட்டு கோவா திரும்பியுள்ளார். அக்கம்பக்கத்தினர், அப்பகுதியில் ரத்தக்கறை இருப்பதை கண்டு புகார் அளித்த நிலையில் உடல் மீட்ட போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
80 கிலோமீட்டர் பயணம் செய்து பிரகாஷை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். கொலையை செய்துவிட்டு, அதை மறைக்க, இறந்த பெண்ணின் சடலத்தை 80 கிலோமீட்டர் கொண்டு சென்ற அந்த நபரின் செயல் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
14 வயது பள்ளி மாணவன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை.. தாய் கதறல்.. என்ன காரணம் தெரியுமா?