HijabVerdict: மாணவர்களை சாதி, மதத்தால் பிரிக்காதீர்.. தீர்ப்பை வரவேற்பதாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் கருத்து..

Published : Mar 15, 2022, 07:22 PM IST
HijabVerdict:  மாணவர்களை சாதி, மதத்தால் பிரிக்காதீர்.. தீர்ப்பை வரவேற்பதாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் கருத்து..

சுருக்கம்

HijabVerdict: ஹிஜாப் வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா தர்ஷா தெரிவித்துள்ளார்.  

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.தொடர்ந்து பல்வேறு கல்லூரிகளில் மூஸ்லிம் மாணவிகள், ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கினர். 

ஹிஜாப் வழக்கு:

இதனையடுத்து கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சில தரப்பு மாணவ- மாணவிகள் காவி நிற துண்டு அணிந்துவந்து , ஹிஜாப் போராட்டதிற்கு எதிராக குரல் கொடுத்தனர். இப்படி இந்த விவகாரம் கர்நாட்க மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனிடையே ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உடுப்பி முஸ்லிம் மாணவிகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கை விசாரித்த கர்நாடக நீதிமன்றம், பள்ளி, கல்லூரிகளுக்குள் மாணவ-மாணவிகள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடைகளை அணிந்து வரக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு முன்பு கடந்த மாதம் தொடர்ந்து 11 நாட்கள் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றது. 

மாணவர்கள் போராட்டம்:

இந்த விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் ஹிஜாப் ஆதரவாளர்கள் மற்றும் வலதுசாரி அமைப்புகளுக்கு இடையே வன்முறை தீவிரமடைந்ததால், பாஜக தலைமையிலான கர்நாடக அரசு பள்ளிகளை சில நாட்களுக்கு மூட உத்தரவிட்டது.இந்த விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் ஹிஜாப் ஆதரவாளர்கள் மற்றும் வலதுசாரி அமைப்புகளுக்கு இடையே வன்முறை தீவிரமடைந்ததால், பாஜக தலைமையிலான கர்நாடக அரசு பள்ளிகளை சில நாட்களுக்கு மூட உத்தரவிட்டது.

இந்நிலைடில் ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதில், ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அவசியமான ஒன்றல்ல. அரசு பள்ளிகளில் ஒரே சீருடை அணிந்து வர வேண்டும் என்ற கர்நாடகா மாநில அரசு பிறப்பித்திருந்த உத்தரவு செல்லும் என்று கூறியுள்ளனர். இதனை எதிர்த்து  6 மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். 

கர்நாடக உயர்நீதிமன்றம்:

இந்நிலையில்  ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் மதம், ஜாதி, இனம் என்று பிரிக்கப்பட கூடாது என்று தெரிவிக்கும் அவர், பெண்கள் எந்த உடையை வேண்டுமானும் அணியலாம். அது அவர்களின் கடமை என்று கூறியுள்ளார். ஆனால் , கல்வி நிலையங்கள் என்று வரும் சீருடை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அவர் கருத்து கூறியுள்ளார்.

மேலும் படிக்க: ஹிஜாப் வழக்கு… கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் மேல்முறையீடு!!

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!