
குஜராத் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் 2 காங். எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்ததை செல்லாது என்று அறிவிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்திடம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தியுள்ளார்.
குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான 3 எம்.பி.க்களின் பதவிக் காலம் விரைவில் முடிய உள்ளது. இதற்கான தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது.
இதில் பாஜக சார்பில் கட்சித் தலைவர் அமித் ஷாவும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
காங்கிரஸ் சார்பில் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலர் அகமது படேல் போட்டியிட்டார்.
இந்நிலையில், இன்று 176 எம்எல்ஏக்களின் வாக்குப்பதிவோடு குஜராத் மாநிலங்களவைத் தேர்தல் முடிந்தது. அதில் 8காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர்.
இதனால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதனால் தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம் செய்து வருகிறது.
இந்நிலையில், குஜராத் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் 2 காங். எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்ததை செல்லாது என்று அறிவிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்திடம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், டெல்லியில் தேர்தல் ஆணையருடன் முக்தர் அப்பாஸ், நிர்மலா சீதாராமன் ஆகியோர் சந்தித்துள்ளனர். ஓட்டுகள் செல்லாது என காங்கிரஸ் கோருவதை நிராகரிக்க வேண்டும் என்றும் மாநிலங்களவைத் தேர்தலில் பதிவான ஓட்டுகளை உடனே எண்ண வேண்டும் என்றும் பாஜக சார்பில் தெரிவித்துள்ளனர்.