கொரோனா பீதி…தாஜ் மஹாலை மூடுங்க..... மத்திய அரசுக்கு கடிதம்....

By Asianet TamilFirst Published Mar 9, 2020, 6:20 PM IST
Highlights

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தாஜ் மஹால் மற்றும் பல்வேறு நாடு முழுவதும் உள்ள பிற முக்கியமான தொல்பொருள் மற்றும் கலாச்சரா தலங்களை தற்காலிகமாக மூடும்படி மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்துக்கு ஆக்ரா மேயர் கடிதம் எழுதியுள்ளார்.
 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தாஜ் மஹால் மற்றும் பல்வேறு நாடு முழுவதும் உள்ள பிற முக்கியமான தொல்பொருள் மற்றும் கலாச்சரா தலங்களை தற்காலிகமாக மூடும்படி மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்துக்கு ஆக்ரா மேயர் கடிதம் எழுதியுள்ளார்.

சீனாவை தொடர்ந்து மற்ற உலக நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியா உள்பட 90 நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்ககை 1 லட்சத்தை தாண்டி விட்டது. இந்தியாவில் மட்டும் இதுவரை 30க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.  நம் நாட்டை  சுற்றிப்பார்க்க வந்த இத்தாலி குழுவினருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து  அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவாமல் இருக்க, தாஜ் மஹால் மற்றும் நாடு முழுவதும் உள்ள முக்கியமான தொல்பொருள் மற்றும் கலாச்சரா தலங்களை தற்காலிகமாக மூடும்படி மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்துக்கு ஆக்ரா மேயர் கடிதம் எழுதியுள்ளார். மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்துக்கு ஆக்ரா மேயர் நவீன் ஜெயின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதை தடுக்க, இந்த மாதம் 3வது வாரம் வரை தாஜ் மஹால் மற்றும் நாடு முழுவதும் உள்ள முக்கியமான தொல்பொருள் மற்றும் கலாச்சரா தலங்களை தற்காலிகமாக மூடவேண்டும். தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் இந்த இடங்களை பார்வையிடுகின்றனர். சீனாவுக்கு வெளியே கொவிட்-19 (கொரோனா வைரஸ்) வேகமாக பரவி வருகிறது. நம் நாட்டில் நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது இருந்தாலும் நாம் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் நடத்தும் நிகழ்ச்சியையும் ஆக்ரா மாநகராட்சி ரத்து செய்துள்ளது. இந்த ஆண்டு அந்த நிகழ்ச்சி புலிவால் பார்க்கில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பயத்தால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

click me!