குடியுரிமை திருத்த சட்டம்.. மோடிக்கு எதிராகவும்.. இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் ஐ.நா. எடுத்த அதிரடி முடிவு..!

By vinoth kumarFirst Published Mar 3, 2020, 2:55 PM IST
Highlights

பெரும் எதிர்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியரிமை திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் கலவரம் மற்றும் வன்முறைகள் வெடித்தன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா, ராஜஸ்தான், மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. குடியரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடர்ந்துள்ளனர். 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைம் தன்னையும் இணைந்து கொள்ள அனுமதிக்கும் படி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பெரும் எதிர்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியரிமை திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் கலவரம் மற்றும் வன்முறைகள் வெடித்தன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா, ராஜஸ்தான், மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. குடியரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடர்ந்துள்ளனர். 

இதையும் படிங்க;- அண்ணியுடன் ஜல்சாவுக்காக ஏக்கத்தில் தவித்த கொழுந்தன்... உல்லாசத்திற்கு வரமறுத்த மின்னலுக்கு நடந்த கொடூரம்..!

இதனிடையே, டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடந்த வாரம் மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில், ஒரு தலைமைக்காவலர் உள்பட 45-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தான் படிப்படியாக அமைதி நிலைக்கு திரும்பி உள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் 19-வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக  ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்துக்கு உதவியாக செயல்பட வழக்கு விசாரணையில் பங்கு கொள்ள அனுமதிக்கும்படி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது. 

இதையும் படிங்க;- அழகான பொண்ணு இருந்தா ஆசைப்படத்தான் செய்வார்கள்... தேமுதிகவை திக்குமுக்காட வைக்கும் எடப்பாடி..!

ஆனால், மத்திய அரசு தரப்பில் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில், திருத்தம் செய்வதற்கு மத்திய அரசுக்கு முழு உரிமை உள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் விதிகளுக்கு இணங்க திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தலையிட வெளிநாட்டு அமைப்பு எதற்கும் உரிமையில்லை என்று தெரிவித்துள்ளனர். 

click me!