சிஏஏ-வுக்கு இடைக்கால தடை விதிக்க மீண்டும் மறுப்பு... அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு..!

By vinoth kumarFirst Published Jan 22, 2020, 11:47 AM IST
Highlights

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பா் 31-ம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய அந்நாடுகளைச் சோ்ந்த சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தர்கள், சமணா்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பா் 31-ம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய அந்நாடுகளைச் சோ்ந்த சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தர்கள், சமணா்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.

குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அந்த மசோதா சட்டமானது. இந்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களிலும், டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் இதர பகுதிகளிலும் போரட்டம் நடத்தப்பட்டு அது வன்முறையாக மாறியது. இதில், பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ், திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து 59 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேசமயம், குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புதான் என உத்தரவிடக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் சில மனுக்கள் உள்ளிட்ட தாக்கல் செய்யப்பட்டன.

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான அனைத்து மனுக்களும், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணை வந்தது. அப்போது, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக அனைத்து வழக்குகளையும் விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியமைக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.

click me!