
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று அதிகாலையில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.
தலைநகர் சாண்டியகோவின் தெற்கு பகுதியில் இருந்து 192 கி.மீ., தொலைவில், 87 கி.மீ., ஆழத்தில் மையம் கொண்ட இந்நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.4-ஆக பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கத்தால் சாண்டியாகோவில் கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நிலநடுக்கத்தால் மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.