தலாய் லாமா தலைக்குக் குறிவைத்த சீனா! சீன உளவாளி கைது

By Srinivasa GopalanFirst Published Dec 30, 2022, 1:56 PM IST
Highlights

சீனாவின் உளவாளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அந்நாட்டுப் பெண் ஒருவரை பீகார் காவல்துறை கைது செய்துள்ளது.

உலக அளவில் புத்த மதத்தினரால் மதிக்கப்படும் புத்தத் துறவி தலாய் லாமா. இவர் 1959ல் சீனா தீபெத்தில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செலுத்தத் தொடங்கியதும் அங்கிருந்து வெளியேறி இந்தியாவின் தர்மசாலாவில் வசித்துவருகிறார்.

ஆண்டுதோறும் புத்த கயாவுக்கு தலாய் லாமா பயணம் மேற்கொள்வார். கொரோனாவால் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு புத்த கயா பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

பிரதமரை பப்பாஞ்சி ஆக்கிட்டாங்க! கொந்தளிக்கும் கேரள பாஜக தொண்டர்கள்!

புத்தாண்டை ஒட்டி வரும் டிசம்பர் 31ஆம் தேதி புத்த கயாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க உள்ளார். அவரைப் பின்தொடர்ந்து செல்லும் சீன உளவாளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சீனப் பெண் ஒருவரை பீகார் போலீசார் கைது செய்துள்ளனர்.

உளவுத்துறை தெரிவித்த தகவல் மூலம் இந்தச் சீனப் பெண்ணைத் தேடிவந்த காவல்துறையினர், அண்மையில் அந்தப் பெண்ணின் படத்தை வெளியிட்டனர். தொடர்ந்த தேடுதல் வேட்டையில் அந்தப் பெண்ணின் பெயர் சாங் சியலோன் என்றும் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி இந்தியாவுக்குள் நுழைந்திருப்பது தெரியவந்துள்ளது.

விசா காலாவதியான நிலையிலும் அவர் தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் வசித்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பெண் தலாய் லாமாவை கண்காணிக்க சீனா அனுப்பி உளவாளியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கைதான சீனப்பெண்ணிடம் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் அவரை சீனாவுக்கே திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்படுகிறது என்றும் புத்த கயா காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.

click me!