சீன நீர்மூழ்கி கப்பல்களின் நடமாட்டம்... எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார்...!!! இந்திய கப்பற்படை தகவல்

Asianet News Tamil  
Published : Dec 03, 2016, 04:08 PM ISTUpdated : Sep 19, 2018, 02:27 AM IST
சீன நீர்மூழ்கி கப்பல்களின் நடமாட்டம்... எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார்...!!! இந்திய கப்பற்படை தகவல்

சுருக்கம்

இந்திய பெருங்கடல் பகுதியில் சீன நீர்மூழ்கி போர்க்‍கப்பல்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதையடுத்து, இந்தியா தனது பாதுகாப்பு முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகளை முடுக்‍கிவிட்டுள்ளது. எந்த சவாலையும் சமாளிக்‍க தயாராக இருப்பதாக கடற்படை அதிகாரிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக இந்திய பெருங்கடல் பகுதியில் சீன நீர்மூழ்கி போர்க்‍கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதேபோன்று, கடல்மார்க்‍கமாக தீவிரவாதிகள் ஊடுருவும் அபாயமும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்திய கடற்படை எந்த சவாலையும் சந்திக்‍க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இதனை தெரிவித்த கடற்படை தலைமை தளபதி அட்மிரல் சுனில் லன்பா, சீன நீர்மூழ்கி கப்பல்கள் கண்காணிக்‍கப்பட்டு வருவதாகவும், எந்த சவாலையும் சந்திக்‍க இந்திய கடற்படை தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். உரி தாக்‍குதல் போன்ற தீவிரவாதிகளின் தாக்‍குதல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்‍கவும், நாட்டுக்‍கு அச்சுறுத்தல் ஏற்படாமல் தவிர்க்‍கவும் கடற்படை முழு விழிப்புடன் இருப்பதாகவும், எந்த அவசர நிலைமை ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சீன நீர்மூழ்கி போர்க்‍கப்பல்களின் நடமாட்டம் குறித்து டெல்லியில் உள்ள கடற்படை தலைமையகத்திற்கு எச்சரிக்‍கை செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக அந்தமான் நிகோபார் பகுதிகளில் இக்‍கப்பல்களின் நடமாட்டம் குறித்து பெரும் கவலை ஏற்பட்டுள்ளதாகவும் கடற்படை சார்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.   

PREV
click me!

Recommended Stories

Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!
இந்தியர்களுக்கு ஜாக்பாட்.! தென்னிந்தியாவில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு.! வருடத்துக்கு எவ்வளவு கிலோ தங்கம் கிடைக்கும் தெரியுமா?