கொரோனா: சீனாக்காரனையே வாய்பிளக்க வைத்த இந்திய தடுப்பூசிகள்.. நம்பகமானவை என புகழாரம்

By karthikeyan VFirst Published Jan 10, 2021, 10:31 PM IST
Highlights

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் நம்பகமானவை, சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவை அல்ல என்று சீனா தெரிவித்துள்ளது.
 

சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. கொரோனாவை பரப்பிய சீனா மீது அமெரிக்கா உட்பட கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் அதீத ஆத்திரத்தில் இருந்தன. சமூக, பொருளாதார செயல்பாடுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி, மனித குலத்தையே பெரும் பாடுபடுத்திவிட்ட வகையில், அதற்கு காரணமான சீனா மீது அனைத்து நாடுகளும் அதிருப்தியில் உள்ளன.

உலகளவில் பெரும் உயர்ச்சேதத்தை ஏற்படுத்திய கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டது. எனினும் எளிதில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய கொரோனா வைரஸுக்கு, தடுப்பூசி மூலம் தான் முடிவுகட்ட முடியும் என்பதால், உலகளவில் அனைத்து விஞ்ஞானிகளும் தடுப்பூசி கண்டுபிடிப்பில் இறங்கின.

அந்தவகையில், இந்தியாவும் அந்த முயற்சியில் ஈடுபட்டது. இதற்கிடையே, சீனாவுடனான எல்லை பிரச்னையால், செம கடுப்படைந்த இந்தியா, சீனாவுடான பொருளாதார, வர்த்தக செயல்பாடுகளை குறைத்துக்கொண்டு, இந்திய பொருளாதாரத்தை சுயசார்பு பொருளாதாரமாக மாற்ற உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசிக்காக எந்த வல்லரசு நாடுகளையும் சார்ந்திருக்காமல், முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்டுள்ள கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் பலகட்ட சோதனைகளுக்கு பிறகு, வரும் 16ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டு போதுமான அளவிற்கு உற்பத்தி செய்யப்பட்டதை கண்டு சற்றே மிரண்டுதான் போயுள்ளது சீனா. அதுமட்டுமல்லாது இந்திய தடுப்பூசிகளுக்கு சர்டிஃபிகேட்டும் கொடுத்துள்ளது. இந்திய தடுப்பூசிகள் நம்பகமானவை என்று தெரிவித்துள்ளது சீனா.

இதுகுறித்து சீனாவின் க்ளோபல் டைம்ஸில் வெளியாகியுள்ள கட்டுரையில், இந்திய தடுப்பூசிகள், சீன தடுப்பூசிகளுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவை அல்ல. தரம் மற்றும் உற்பத்தியின் அடிப்படையில் மிகச்சிறப்பானவை. மேலும் இந்திய தடுப்பூசிகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்று புகழ்ந்துள்ள சீனா, அவற்றை பரிந்துரையும் செய்துள்ளது.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட், பக்குவமான உற்பத்தி மற்றும் சப்ளையில், மேற்கத்திய நாடுகளை விட சிறந்து விளங்குகிறது. சீனாவின் ஜிலின் பல்கலைக்கழகத்தின் லைஃப் ஆஃப் சயின்ஸ் துறை சார்பில் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தை பார்வையிட்ட பின், இந்திய தடுப்பூசி உற்பத்தி மற்றும் சப்ளை தரம் வாய்ந்தது என்றும், இந்திய தடுப்பூசிகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்றும் தெரிவித்துள்ளது சீனா.
 

click me!