
டெல்லி தலைமை செயலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலின் கார் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி மாநில முதலமைச்சருமாக இருப்பவர் அர்விந்த் கெஜ்ரிவால். இவர் நீல நிறம் கொண்ட வேகன் ஆர் காரைப் பயன்படுத்தி வருகிறார்.
இந்த கார், டெல்லி தலைமை செயலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த காரை ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் ஒருவர் பயன்படுத்தியதாக தெரிகிறது.
டெல்லி தலைமை செயலகத்தில் எப்போதும் பாதுகாப்பு பணிகளில் போலீசார் இருப்பர். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுங்களுக்கு முன்பு கெஜ்ரிவால் கார் திருடப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கெஜ்ரிவால், அந்த காரை பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறார். எப்போதும் பலத்த பாதுகாப்புடன் காணப்படும் தலைமை செயலகத்தில், அதுவும் முதலமைச்சரின் கார் திருடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.