சுவர் ஏறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தவருக்கு குடியரசுத் தலைவர் விருது..!

By vinoth kumarFirst Published Jan 26, 2020, 2:54 PM IST
Highlights

இன்று நாட்டில் 71-வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு குடியரசுத் தலைவரின்  காவலர் விருது அறிக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தை கைது செய்ய அவரது வீட்டின் 6 அடி உயர சுவரை ஏறிக் குதித்த டிஎஸ்பி ராமசாமி உள்ளிட்ட 28 சிபிஐ அதிகாரிகள் இந்த விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் டெல்லியில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது சுவர் ஏறிக் குதித்து அவரைக் கைது செய்த டிஎஸ்பி ராமசாமி பார்த்தசாரதிக்கு சிறப்பாகப் பணியாற்றியதற்கான காவலர் விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார்.

இன்று நாட்டில் 71-வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு குடியரசுத் தலைவரின்  காவலர் விருது அறிக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தை கைது செய்ய அவரது வீட்டின் 6 அடி உயர சுவரை ஏறிக் குதித்த டிஎஸ்பி ராமசாமி உள்ளிட்ட 28 சிபிஐ அதிகாரிகள் இந்த விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மிக நிதானமான, அதே சமயம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் அதிகாரி என பெயர் பெற்றவர் ராமசாமி. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்தின் மகன் கார்த்தியையும் கைது செய்தது இவர் தான். இந்த குழுவில் இடம்பெற்ற மற்றொரு உயர் அதிகாரி தீரேந்திர சுக்லா. இந்த குழுவிற்கு தலைமையாக இருந்த இவர், யுஏஇ.யில் இருந்து வந்த முதல் இந்திய அதிகாரி ஆவார். இவர் பல சவாலான, சிக்கலான குற்றங்களை திறம்பட சிறப்பாக கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!