சத்தீஸ்கரில் பயங்கர விபத்து! நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதிய பயணிகள் ரயில்!

Published : Nov 04, 2025, 05:43 PM IST
Chhattisgarh Bilaspur Train Accindent

சுருக்கம்

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது கோர்பா பயணிகள் ரயில் மோதியதில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தால் பல ரயில் பெட்டிகள் தடம் புரண்டன, மேலும் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நடந்த பயங்கர ரயில் விபத்தில் குறைந்தது ஆறு பேர் உயிரிழதுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். கோர்பா பயணிகள் ரயில், லால் காதன் பகுதிக்கு அருகில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் பல ரயில் பெட்டிகள் தடம் புரண்டதோடு மட்டுமல்லாமல், தண்டவாளத்திற்கு மேலுள்ள மின் கம்பிகள் மற்றும் சிக்னல் அமைப்புகளும் கடுமையாகச் சேதமடைந்தன. இந்த விபத்து காரணமாகப் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

மீட்புப் பணிகள் தீவிரம்

ரயில்வே மீட்புக் குழுக்கள், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) வீரர்கள் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். அவசர மருத்துவக் குழுக்கள் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர். மீட்புப் பணிகளை மேற்பார்வையிட மூத்த ரயில்வே அதிகாரிகளும் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்ட ரயில் பிரிவைத் துரிதமாகச் சீரமைத்து, ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க மறுசீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவசர உதவி எண்கள்

விபத்து குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்பும் பயணிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்காக ரயில்வே நிர்வாகம் உதவி எண்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, சாம்பா சந்திப்புக்கு 808595652, ராய்கருக்கு 975248560, பென்ட்ரா ரோடுக்கு 8294730162 ஆகிய எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தில் உதவி பெற 9752485499, 8602007202 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!