கோர விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழப்பு!

Published : Oct 14, 2018, 12:54 PM IST
கோர விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழப்பு!

சுருக்கம்

சத்தீஸ்கரில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

சத்தீஸ்கரில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சத்தீஸ்கர் மாநிலம் டோங்கர்கர் என்ற பகுதியிலிருந்து பில்லை பகுதிக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் - டிரக் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். 

இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ரயிலில் லக்கேஜ் கொண்டு போக 1.5 மடங்கு கூடுதல் கட்டணம்! ரயில்வே அமைச்சர் அறிவிப்பு
மெட்ரோ வேகமா? ஸ்கூட்டர் வேகமா? பெங்களூரு டிராபிக்கில் ஒரு ஜாலி பந்தயம்!