கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமார் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை கடந்த சில மாதங்களுக்கு முன் விசாரணை நடத்தியது. பின்னர், செப்டம்பர் 3-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பல முறை ஜாமீன் கோரியும் அவை நிராகரிக்கப்பட்டது.
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் நெஞ்சு வலி காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
undefined
கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமார் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை கடந்த சில மாதங்களுக்கு முன் விசாரணை நடத்தியது. பின்னர், செப்டம்பர் 3-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பல முறை ஜாமீன் கோரியும் அவை நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து, 51 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு கடந்த மாதம் 24-ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் ஜாமீனில் விடுதலையாகி அவர் தனது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது திடீரென அவருக்கு நேற்று இரவு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.