ஆட்சியமைக்க போகும் நேரத்தில் சிவசேனா கட்சிக்கு அதிர்ச்சி... கதறி துடிக்கும் நிர்வாகிகள்..!

By vinoth kumarFirst Published Nov 11, 2019, 5:35 PM IST
Highlights

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க முக்கிய துருப்புச்சீட்டாக இருந்த மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க முக்கிய துருப்புச்சீட்டாக இருந்த மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மகாராஷ்டிரா அரசியல் தினமும் ஒரு பரபரப்பு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 வாரம் ஆகிய நிலையில் ஆட்சி அமைப்பதில் இன்னும் விடை கிடைக்கவில்லை. இந்நிலையில், மகாராஷ்டிராவில் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் தான் முதல்வராக வரவேண்டும் என்பதிலும், பாஜக தொடர்ந்து அழுத்தம் கொடுத்த வந்தவர்களின் சஞ்சய் ராவத் முக்கியமானவர்.

சிவசேனா சார்பில் மக்களவை உறுப்பினராக பதவி வகித்து வரும் சஞ்சய் ராவத், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை திரட்டுவதிலும் அக்கட்சியின் மேலிட தலைவர்களுடன் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதிலும் முக்கிய பங்காற்றி வந்தார்.

இந்நிலையில், இன்று பிற்பகலில் சஞ்சய் ராவத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு நாளை அவர் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. சிவசேனா ஆட்சியமைக்கும் சமையத்தில் சஞ்சய் ராவத்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாமனா’ பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும் சஞ்சய் ராவத் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!