
திருச்சி முதல் சென்னை வரையிலான இரட்டை வழிரெயில் பாதை பணிகள் முழுமையாக நிறைவடைந்ததால், சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு இனி 4 மணிநேரத்தில் செல்ல முடியும்.
அதிகபட்சமாக ரெயில்கள்100கி.மீ வேகத்திலும், சராசரியாக 75 கி.மீ வேகத்திலும் இயக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரட்டை ரெயில் பாதை
சென்னை முதல் திருச்சி வரையிலான இரட்டை ரெயில்பாதைக்கான பணிகள் ரெயில்விகாஸ் நிகம் லிமிட் நிறுவனம் மூலம் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்தன. இதனால், பகல் நேரத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ் என குறிப்பிட்ட சிலரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.
மேலும், திருச்சியில் இருந்து சென்னைக்கு ஒரு ரெயில்வந்து கொண்டு இருக்கிறதுசிக்னலுக்காக ஏதாவது ஒரு இடத்தில் மற்றொரு ரெயில்நிறுத்தப்படும். இதனால், ஏறக்குறைய சென்னை திருச்சி இடையேயான பயண நேரம் 6 மணிநேரத்துக்கு மேலாக இருந்து வருகிறது.
திருச்சி -வாலடி
இந்நிலையில், திருச்சி- வாலடி இடையே 20 கி.மீ தொலைவில் நடந்து வந்த பணிகள் கடந்த 23ந் தேதி அனைத்தும் முடிந்து, போக்குவரத்துக்கு தயாராக உள்ளது. இரட்டை வழித்தடம் பயன்பாட்டுக்கு வரம் போது, திருச்சி-சென்னை இடையிலான பயண நேரம் 33 சதவீதம் குறையும்.
100 கி.மீ.வேகம்
வழக்கமான நிறுத்தங்களுடன், சென்னை-திருச்சி இடையே இனி ரெயில்கள் அதிகபட்சமாக 100 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். சராசரியாக 75 கி.மீ வேகத்தில் இயக்க முடியும் என்றுரெயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது.
4 மணிநேரம்
இது குறித்து ரெயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ திருச்சி-வாலடி இடையிலான 20கி.மீ இரட்டை வழித்தடம் பணிகள் முடிந்துவிட்டன. இதனால், சென்னை-திருச்சி இடையிலான 334 கி.மீ. இடையிலான தொலைவை 4 மணி நேரத்தில் கடக்க முடியும். தற்போது இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் 5 முதல் 7 மணிநேரம் வரை ஆகிறது.
உடனடியாக 30 நிமிடங்கள் குறையும்
குறிப்பாக இரவு நேரத்தில் இயக்கப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், 6.30 மணி நேரத்திலும், பாண்டியன்எக்ஸ்பிரஸ்5.25மணிநேரத்திலும் செல்கிறது. இரட்டை வழித்தடம் பணிகள் முடிந்துவிட்டதால்,ரெயில்களின் வேகத்தை உடனடியாக அதிகப்படுத்தி, பயண நேரத்தை குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் குறைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.
ஒரு மாதத்துக்குள்
வழக்கமாக அக்டோபர் மாதத்தில்தான் ரெயில்களின்நேரம், வேகம் மாற்றி அமைக்கப்பட்டு அறிக்கைவௌியிடப்படும். ஆனால், இரட்டை வழிதடம் முடிந்து விட்டதால், அடுத்த ஒரு மாதத்துக்குள், நேரம், வேகம் மாற்றி அமைப்பு வெளியிடப்படும்.
அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் திருச்சி-சென்னை இடையிலான ரெயில்கள்வேகம் படிப்படியாக 100 கி.மீ வரை அதிகரிக்கப்படும். இந்த வழித்தடத்தில் இயக்கப்படும்ரெயில்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.
மதுரை, நெல்லை
இதனால், பாசஞ்சர் ரெயில்சேவையான தாம்பரம் முதல் திருச்சி, செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான சேவை கூடியவிரைவில் நடைமுறைக்கு வரும். இதன் பயண நேரமும் 4 மணிநேரமாக இருக்கும். அதுமட்டும்லாமல்சென்னை முதல் மதுரை, திருநெல்வேலி இடையிலான பயண நேரமும் வெகுவாகக் குறையும்.