"சென்னை வெள்ளத்தை தடுக்க என்ன வழி?" - குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவு

Asianet News Tamil  
Published : Nov 16, 2016, 01:35 AM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
"சென்னை வெள்ளத்தை தடுக்க என்ன வழி?" - குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவு

சுருக்கம்

நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்பட்டு, பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு  குழு ஒன்றை அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுப்பதற்காக , நீர்நிலைகளை நவீன தொழில்நுட்பம் மூலம் தூர்வாரி முறையாக பராமரிக்க வேண்டுமென உத்திரவிடக்  கோரி வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது  நீதிபதிகள , நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்பட்டு, பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய  குழு ஒன்றை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் பொதுப்பணித்துறை செயலாளர் பிராபாகர் , வருவாய்த்துறை செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். மேலும் இந்த வழக்கு மீதான விசாரணையை டிசம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.         

PREV
click me!

Recommended Stories

ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட Air India.. இலவச ரீ ஷெட்யூல், டிக்கெட் கேன்சல் செய்பவர்களுக்கு முழு பணம் ரிட்டன்
பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் திடீர் விலகல்.. பாஜக அழுத்தமா? பரபரப்பு தகவல்!