10 ஆயிரம் பேர் செத்து மிதப்போம்... உதவி செய்யுங்கள்... MLA கதறல்!

By sathish kFirst Published Aug 19, 2018, 9:11 AM IST
Highlights

ஞாயிறுக்குள் மீட்காவிட்டால் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் செத்து பிணமாக ஆற்றில் மிதப்பார்கள்” என்று கேரளா MLA செரியன்  கண்ணீரோடு கதறி அழுதுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளா மாநிலம் தொடர் மழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  கடந்த 10 நாட்களாகப் பெய்துவரும் பெருமழையால் இதுவரை 324 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,094 முகாம்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்து 14 ஆயிரத்து 391 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான மக்கள் தங்களது வீடுகள், உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். 

இதற்கிடையே, கேரளாவில் 11 மாவட்டங்களில் மீண்டும் மிகப் பெருமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளதால்,   செங்கனூர் எம்எல்ஏ சாஜி செரியன் கண்ணீரோடு உதவி கேட்டுள்ளார், ”அச்சன்கோயில், பம்பா, மணிமலையாறு ஆகியவற்றில் வெள்ளம் அபாய கட்டத்தைத் தாண்டி பாய்கிறது.

2வது மாடி வரை வெள்ளம் செல்வதால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட எல்லோரும் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். பல நாட்களாக உணவு இல்லை, மருந்து இல்லை, குடிக்க தண்ணீரும் இல்லாமல் தவிக்கிறார்கள். பலரிடம் உதவி கேட்டுவிட்டேன். எந்த மீட்பு பணியும் நடக்கவில்லை. 

சுலபமாக எட்ட முடியாத ரிமோட் ஏரியாஎன்று சொல்லி தவிர்த்து விடுகிறார்கள். முதலமைச்சரிடம் பேசியும் பலன் இல்லை. விமானமோ ஹெலிகாப்டரோ அனுப்பி இந்த மக்களை மீட்டு தாருங்கள். ஞாயிறுக்குள் மீட்காவிட்டால் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் செத்து பிணமாக ஆற்றில் மிதப்பார்கள்” என்று செரியன் குமுறுகிறார். 

click me!