நள்ளிரவில் இடிந்து விழுந்த கொள்ளிடம் பாலம் !! 20ஆவது தூணும் இடிந்து விழுந்தது !!

By Selvanayagam PFirst Published Aug 19, 2018, 8:54 AM IST
Highlights

திருச்சி கொள்ளிடம் பழைய பாலத்தின்  18 வது தூண் நள்ளிரவில் முற்றிலும் டிநத் நிலையில் தற்போது 20 முவது தூணும் இடிந்து விழுந்தது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருகே, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, சென்னை - திருச்சி சாலையில், 1928ல் இரும்பு பாலம் கட்டப்பட்டது. இப்பாலம், நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் காலத்தை நிறைவு செய்தது. இதையடுத்து 2012ல், புதிய பாலம் கட்டப்பட்டு 2016 பிப்ரவரி., 14ல் திறந்து வைக்கப்பட்டது.பழைய இரும்பு பாலத்தில், அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.

100 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த பழைய பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. அந்த பாலத்தில், இரண்டு துாண்களில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இந்த பாலத்தின் வழியாக போக்கு வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்தது. பொது மக்கள் நடை பயிற்சிக்கு மட்டும் அந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.விரிசல் ஏற்பட்டதையடுத்து நடைபயிற்சிக்கும் தடை விதிக்கப்பட்டது.

 

இந்த பாலத்தை ஆய்வு செய்த அமைச்சர் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள், விரைவில் பாலம் இடிக்கபபடும் என்றும், அதில் புதிய பாலம் கட்டப்படும் என்றும் அறிவித்தனர்.

 

இந்நிலையில்  விரிசல் கண்டிருந்த கொள்ளிடம் புதிய பாலம் நேற்று நள்ளிரவு இடிந்து விழுந்தது, முதலில் 18 ஆவது தூணும், பின்னர் 20 ஆவது தூணும் இடிந்து விழுந்தது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

click me!