விக்ரம் லேண்டர் எஞ்சின் செயலிழந்தாலும் சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும்! இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம்

By SG Balan  |  First Published Aug 9, 2023, 10:32 AM IST

விக்ரம் லேண்டரில் சென்சார்கள் மற்றும் என்ஜின்கள் வேலை செய்யவில்லை என்றாலும், சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்க முடியும்  என இஸ்ரோ தலைவர் சோம்நாத் குறிப்பிட்டுள்ளார்.


சந்திரயான்-3  விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் அதன் இரண்டு எஞ்சின்கள் வேலை செய்யாவிட்டாலும், ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்க முடியும் என்று என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ். சோமநாத் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், விக்ரம் லேண்டரின் முழு வடிவமைப்பும் இயன்ற அளவுக்கு தோல்விகளைச் சமாளித்து தரையிரங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Tap to resize

Latest Videos

மேலும், "அனைத்து சென்சார்களும் செயலிழந்தாலும், விக்ரம் லேண்டர் தரையிறங்கும். அப்படித்தான் இது வடிவமைக்கப்பட்டுள்ளது - உந்துவிசை அமைப்பு நன்றாக வேலை செய்யும். என்ஜின்கள் வேலை செய்யவில்லை என்றாலும், தரையிறங்க முடியும் என்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்" என சோம்நாத் குறிப்பிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. அதனை மேலும் நெருக்கமாக கொண்டுசெல்வதற்கான உயரக்குறைப்பு நடவடிக்கை படிப்படியாக மேற்கொள்ளப்படுகிறது. ஆகஸ்ட் 23 அன்று நிலவின் மேற்பரப்பில் விக்ரம் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"திட்டம் சரியாக வேலை செய்யும் பட்சத்தில், விக்ரம் பல தோல்விகளைச் சமாளிக்கும் வகையில் முழுமையாக வடிவமைப்பும் செய்யப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவிக்கிறார்.

நிலவில் கிடைமட்டமாக 'விக்ரம்' லேண்டர் செங்குத்தாக மென்மையாகத் தரையிறங்குவதுதான் இஸ்ரோ குழுவின் முன் இருக்கும் மிகப்பெரிய சவால். லேண்டர் ஆர்பிட்டரில் இருந்து பிரிந்தவுடன் சந்திரனில் பாதுகாப்பாக தரையிறங்குவதற்காக கிடைமட்டமாக நகரத் தொடங்கும் எனவும் சோமநாத் விளக்கியுள்ளார்.

click me!