நிலவை நெருங்கும் சந்திரயான் 3.. முடிவுக்கு வரும் புவி வட்டப்பாதை.. இனி நிலவின் வட்டப்பாதைக்குள் பயணம்!

By Ansgar R  |  First Published Jul 31, 2023, 2:29 PM IST

இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் - 3, வெற்றிகரமாக கடந்த ஜூலை 14ம் தேதி நிறைவேறியது. பல்வேறு ஆராய்ச்சிகளை மனதில் கொண்டு இந்த விண்கலம், நிலவை நோக்கிய பயணத்தை துவங்கியது.


ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து ஜூலை 14ம் தேதி மதியம் 2. 35 மணிக்கு சந்திரயான் 3, நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது. இந்நிலையில் கடந்த 17 நாட்களாக நிலவை நோக்கி பயணித்து வரும் சந்திரயான் 3 நாளை புவி வட்ட பாதையில் இருந்து கடந்து, நிலவின் வட்டப்பாதைக்குள் நுழையும் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். 

இது இந்த விண்கலத்தின் ஒரு முக்கியமான கட்டம் என்றும் கருதப்படுகிறது. புவிவட்ட பாதையில் இருந்து விலகி, நிலவின் வட்டப்பாதைக்குள் விண்கலம் சென்றதும் விண்கலத்தின் ஓடுபாதையில் மாற்றங்கள் செய்யப்பட்டு, திட்டமிட்டவாரே ஆகஸ்ட் 23ம் தேதி மெதுவாக நிலவில் அது தரையிறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Tap to resize

Latest Videos

இந்த விண்கலம் சுமார் 1.2 லட்சம் கிலோமீட்டர் தூரத்தை, சுமார் 51 மணி நேரத்தில் கடக்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரம் என்பது சுமார் 3.5 லட்சம் கிலோமீட்டர், ஆனால் புவிவட்ட பாதையை தாண்டி, நிலவின் வட்டப்பாதைக்குள் நுழைந்து விண்கலம் செல்லும்பொழுது அதன் பாதையில் சில மாற்றங்கள் ஏற்படும். 

Free OTT : டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை 3 மாதத்துக்கு இலவசமாக பார்க்கலாம்.. முழு விபரம் இதோ !!

ஆகவே சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் தூரம் வரை இந்த வெண்கலம் பயணிக்க வேண்டியது இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. குறைந்தபட்சமாக 230 கிலோமீட்டர் தொலைவு, அதிகபட்சமாக 1,27,600 கிலோமீட்டர் தொலைவும் கொண்ட சுற்றுப்பாதைக்கு தற்பொழுது விண்கலமானது கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக புவியின் வட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் விண்கலம் உந்தி தள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. பலநூறு விஞ்ஞானிகளின் முயற்சிகளை பார்க்கும்போது பிரம்மிப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp : இனிமே எல்லாமே மாறப்போகுது.. வாட்ஸ்அப் வெளியிட்ட அசத்தல் அப்டேட் - முழு விபரம்

click me!