"சசிகலாவுக்கு தண்டனை ஓ.கே; இவருக்கு என்ன தரப்போறீங்க?" - கேட்கிறார் சந்திரபாபு நாயுடு

 
Published : Feb 15, 2017, 04:06 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
"சசிகலாவுக்கு தண்டனை ஓ.கே; இவருக்கு என்ன தரப்போறீங்க?" - கேட்கிறார் சந்திரபாபு நாயுடு

சுருக்கம்

‘‘ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக சொத்து குவித்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை கிடைக்கப்போகிறதோ?’’ என, ஆந்திரா முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பினார்.

சசிகலா வழக்கு

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் 4 ஆண்டுகால தண்டனை மற்றும் ரூ.10 கோடி அபராதத்தை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில், அமராவதியில் தெலுங்கு தேசம் கட்சியின் செயற்குழு கூட்டம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

என்ன தண்டனை?

‘‘சட்டம், நீதிக்கு முன் அனை வரும் சமம் என்பதையே இந்தத் தீர்ப்பு சுட்டிக்காட்டுகிறது. தமிழக அரசியலில் இந்தத் தீர்ப்பு மிக முக்கியமான கட்டத்தில் வெளியாகி உள்ளது.

முறைகேடாக ரூ.66 கோடி சொத்து குவித்தவர்களுக்கே 4 ஆண்டுகள் சிறை தண்டனை, அபராதம் எனில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் சொத்து குவித்துள்ள (ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர்) ஜெகன் மோகன் ரெட்டிக்கு எத்தனை ஆண்டுகாலம் சிறைத் தண்டனை கிடைக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது’’.

இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!