
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா உட்பட 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இவர்கள் குற்றவாளிகள் என்பதற்கு இந்த ஆதாரம் ஒன்றே போதும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அதனால் 4 ஆண்டு சிறைத் தண்டைனையில் எஞ்சியுள்ள தண்டனையை இவர்கள் அனுபவிக்க வேண்டும் எனவும், பெங்களூரு நீதிமன்றத்தில் அறைஎண் 48-ல் நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் இவர்கள் 3 பேரும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
சசிகலா, கட்சி தலைமையில் மட்டும் இருந்திருக்கலாம் எனவும் தற்போது 'பேராசை பெரு நஷ்டம்' என்ற உண்மை நிலைத்து விட்டதாகவும் அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறி வருகின்றனர்.