சைபர் குற்றங்களில் ஈடுபட்டதாக 28,000 செல்போன்களை முடக்கி மத்திய அரசு அதிரடி!

By Manikanda Prabu  |  First Published May 10, 2024, 6:54 PM IST

சைபர் குற்றங்களில் ஈடுபட்டதாக 28,000 செல்போன்களை முடக்கி மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது


சைபர் குற்றங்களில் ஈடுபட்டதாக 28,200 செல்போன்களை முடக்கி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட மத்திய அரசு, இந்த கைபேசிகளுடன் தொடர்புடைய 20 லட்சம் மொபைல் எண்களை மீண்டும் சரிபார்க்கவும் உத்தரவிட்டுள்ளது.

சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் தொலைத்தொடர்பு வளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க தொலைத் தொடர்புத் துறை, உள்துறை அமைச்சகம், மாநில காவல்துறை ஆகியவை கைகோர்த்துள்ளதாக மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்தக் கூட்டு முயற்சி மோசடி செய்பவர்களின் நெட்வொர்க்குகளை அகற்றுவதையும், டிஜிட்டல் அச்சுறுத்தல்களிலிருந்து குடிமக்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டது எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

உள்துறை அமைச்சகம், மாநில காவல்துறை, தொலைத் தொடர்புத் துறை நடத்திய ஆய்வில், 28,200 மொபைல் போன்கள் சைபர் குற்றங்களில் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதும் இவற்றில் 20 லட்சம் எண்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!

இதையடுத்து,  நாடு முழுவதும் 28,200 மொபைல் போன்களை முடக்கவும், இந்த மொபைல் போன்களுடன் இணைக்கப்பட்ட 20 லட்சம் மொபைல் இணைப்புகளை உடனடியாக மறு சரிபார்ப்பு செய்யவும், இது சரியில்லை என்றால் தொடர்பை துண்டிக்கவும் தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

click me!