தமிழகத்தில் 4,000 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு 719.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்பதல் வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இரண்டாவது கட்ட பசுமை மின்வழித் தடம் அமைக்கும் ‘கிரீன் எனர்ஜி காரிடார்-2’ திட்டத்தை 2025-26ஆம் ஆண்டுக்குள் முடிக்க மத்திய மின்துறை முடிவு செய்துள்ளது. இத்திட்டத்திற்கான மின்வழித் தடங்கள், மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் மாநில மின் தொடரமைப்பு கழகம் (TANTRANSCO) செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி, தமிழகத்தில் 4,000 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான 624 கிலோமீட்டர் தொலைவுக்கு மின்வழித் தடங்கள் மற்றும் 2,200 மெகாவாட் திறன் கொண்ட துணை மின்நிலையங்கள் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்... சீனாவுக்கு சரிவுதான்! மார்கன் ஸ்டான்லி நிறுவனம் கணிப்பு
"புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால், 719.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 33 சதவீத மானியத்தில், மத்திய அரசின் ரூ.237.52 கோடி பங்களிப்புடம் இந்தத் திட்டதத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது" என்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே. சிங் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டத்திற்குத் ஜெர்மனியைச் சேர்ந்த கே.எஃப்.டபிள்யூ. வங்கி ரூ.338 கோடி கடன் கொடுக்க உள்ளது. மீதித் தொகையை தமிழ்நாடு மின்வாரியமே வழங்கும். இதற்காக ஜெர்மனி வங்கியுடன் 2022ஆம் ஆண்டு தமிழக மின்வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சமூகரெங்கபுரத்தில் 400 கிலோவாட் துணைமின் நிலையம் அமைய உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல் மற்றும் திருப்பூர் மாவட்டம் பூலவாடி ஆகிய இடங்களில் 230 கிலோவாட் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.
பசுமை ஆற்றல் வழித்தடத்தின் முதல் கட்டத்தில், 1,068 கிமீ மின்வழித் தடங்கள் மற்றும் 1,910 மெகாவாட் திறன் கொண்ட துணை மின்நிலையங்களை அமைப்பதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.524.30 கோடி மானியம் அளித்துள்ளது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தங்கம் விற்பனை 7 சதவீதம் சரிவு! நகை வாங்க ஆர்வம் குறைந்தது ஏன்? உலக தங்க கவுன்சில் தகவல்