சமையல் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை... மத்திய அரசு விதித்த புதிய கட்டுப்பாடுகள்!!

Published : Feb 04, 2022, 10:07 PM IST
சமையல் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை... மத்திய அரசு விதித்த புதிய கட்டுப்பாடுகள்!!

சுருக்கம்

சமையல் எண்ணையை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சமையல் எண்ணையை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமையல் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்களை இருப்பு வைக்க ஜூன் 30 வரை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சிறு விற்பனையாளர் 30 குவிண்டால், மொத்த விற்பனையாளர் 100 குவிண்டால் இருப்பு வைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்களை இருப்பு வைக்க ஜூலை 30 வரை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

சமையல் எண்ணெய் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை அடுத்தே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் இந்த கட்டுப்பாடு விதித்து இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமையல் எண்ணெய் சில்லறை விற்பனையாளர்கள் 30 குவிண்டால் மட்டுமே இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஆனால் அதே நேரத்தில் மொத்த விற்பனையாளர்கள் 500 குவிண்டால் வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த இருப்பு அளவை மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஆபாச AI படங்களுக்கு ஆப்பு! எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்துக்கு மத்திய அரசு வார்னிங்!
10 மகள்கள் இருந்தும் ஆண் வாரிசு இல்ல.. உயிருக்கே ஆபத்தான 11வது பிரவசம்..!