உஷார்...!!! ரூ.2.5 லட்சத்துக்கு அதிகமாக டெபாசிட் செய்தால் 200 % அபராதம்

Asianet News Tamil  
Published : Nov 11, 2016, 12:32 AM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
உஷார்...!!! ரூ.2.5 லட்சத்துக்கு அதிகமாக டெபாசிட் செய்தால் 200 % அபராதம்

சுருக்கம்

கருப்பு பணப்புழக்கத்தை கடுமையாக ஒழிக்கும் நடவடிக்ைகயாக, வங்கிகளில் ரூ.2.5 லட்சத்துக்கு  அதிகமாக ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளை டெபாசிட் செய்வோர் மீது 200 சதவீதம் அபராதம், வரி விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணம், அவர்களின் வருமானத்துக்கு சரியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வரி, அபாரம் உள்ளிட்ட 200 சதவீதம் செலுத்த வேண்டியது வரும்.

இது குறித்து மத்திய வருவாய்துறை செயலாளர் ஹாஸ்முக் ஆதியா நேற்று கூறுகையில், “ நவம்பர் 10-ந் தேதி முதல் டிசம்பர் 30-ந்தேதி முதல் வங்கிகளில் யாரெல்லாம் டெபாசிட் செய்கிறார்கள் என்கிற விவரங்களை கண்காணிப்போம். அதில் ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை ரூ 2.5 லட்சத்துக்கு அதிகமாக டெபாசிட் செய்வோரின் விவரங்கள் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்படும்.

அதில் அவர்களின் வருவாயும், செலுத்தும் தொகையும் கணக்கில் சரியாக இருக்க வேண்டும். அதுகுறித்து வருமான வரித்துறையிடம் கணக்கும், ரிட்டனும் தாக்கல் செய்ய வேண்டும். அதில் ஏதேனும் குளறுபடிகள் இருந்து, கருப்பு பணத்தை மாற்றுவதாக தெரிந்தால். அந்த நபர்கள் மீது வரி, அபராதம் உள்ளிட்ட 200 சதவீதம் விதிக்கப்படும். அவர்கள் மீது வருமானவரிச்சட்டம் 270 பிரிவின்படி வரிஏய்ப்பு வழக்கு தொடரப்படும்'' எனத் தெரிவித்தார்.

அதாவது, ஒருவர் ரூ.3 லட்சத்தை டெபாசிட் செய்கிறார் என்றால், அதற்கு முறையான கணக்கு வைத்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அபராதம், வரி என அனைத்தும் சேர்த்து, அரசுக்கு ரூ.6 லட்சம் செலுத்த வேண்டும், வழக்கையும் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஜாக்கிரதை.! உங்கள் செல்போன் சிக்னல் துண்டிக்கப்படலாம்? LPG தட்டுப்பாட்டால் முடங்குகிறதா இந்திய டெலிகாம் துறை?
WFH Start: இனி ஆபீஸ் போக வேண்டாம்! மீண்டும் வருகிறது வொர்க் ஃபிரம் ஹோம்! அடுத்தடுத்து உத்தரவிடும் நாடுகள்.!