
சமீபகாலமாக இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் அதில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளுக்கு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.
ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை விதித்து சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘தற்போது இயற்றப்பட்ட சட்டம் சரியானதாக இல்லை" எனவும், ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக வலுவான சட்டம் கொண்டு வாருங்கள் எனக்கூறி ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு அனுமதி அளித்தது.
தற்போது திமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் மூலம் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் அரங்கேறி வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு சரியான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் சிறப்பு குழவை அமைத்து தமிழக அரசு உத்தவிட்டுள்ளது.
இதுக்குறித்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான எந்த விளம்பரத்தையும் ஒளிபரப்பக்கூடாது என்று மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டங்கள் சமூக சிக்கல்களையும், நிதி பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறத்து என்று தெரிவித்துள்ளது. இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஆன்லைன் சூதாட்டங்கள் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இதனால் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை வலைத்தளங்கள், இணைய ஊடகங்களிலும் வெளியிடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள், இணைய தலைகள் மக்கள் நலன் கருதி சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை வெளியிட கூடாது என மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
எனவே, அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்கள் மூலம் உயிர்பலி மற்றும் பணம் இழப்பு உள்ளிட்டவைகள் நிகழ்ந்து வரும் நிலையில், மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க : மேலிடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு..டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் - பின்னணி காரணம் இதுவா ?
இதையும் படிங்க : Sonu Sood : நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. நடிகர் சோனு சூட் செய்த நெகிழ்ச்சி செயல்.!