"இனி இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது" - மத்திய அரசு திடீர் உத்தரவு

 
Published : May 26, 2017, 04:11 PM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
"இனி இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது" - மத்திய அரசு திடீர் உத்தரவு

சுருக்கம்

central government bans cow business for beef

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பசுவதை தடுப்புச் சட்டத்தை நாடு முழுவதும் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. 

உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரியில் மாட்டை இறைச்சிகாகா வெட்டிய  முதியவர் வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

வடமாநிலங்களில் மாட்டிறைச்சி விற்பனையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனைக் கண்டித்து அண்மையில் முழு அடைப்பு போராட்டத்திலும் மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் ஈடுபட்டனர். 

மாட்டிறைச்சி விவகாரத்தில் மிகக் கடுமையான போக்கை கையாண்டு வரும் மத்திய அரசு யாருமே எதிர்பாரத வகையில் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.  கால்நடை வர்த்தகத்திற்கான விதிமுறைகளில் மத்திய அரசு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. 

அதன்படி இனி நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவசாயிகள் மட்டுமே சந்தைகளில் மாடுகளை விற்பனை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ராகுல் பற்றி சோனியா காந்தியிடம் புகார்.. முன்னாள் காங். எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து நீக்கம்!
இந்தியாவுக்கு மீண்டும் வருவேன்! கால்பந்து ரசிகர்களுக்கு மெஸ்ஸி சொன்ன குட்நியூஸ்!