2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட்….இரு அவைகளிலும் நிறைவேறியதுஎதிர்க்கட்சிகளின் 5 திருத்தங்கள் ஏற்பு

 
Published : Mar 30, 2017, 06:11 AM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட்….இரு அவைகளிலும் நிறைவேறியதுஎதிர்க்கட்சிகளின் 5 திருத்தங்கள் ஏற்பு

சுருக்கம்

central budget

2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட்….இரு அவைகளிலும் நிறைவேறியதுஎதிர்க்கட்சிகளின் 5 திருத்தங்கள் ஏற்பு

2017-18ம் நிதியாண்டு பட்ஜெட்டுக்கான நிதி மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதில், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த 5 திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன்மீதான விவாதம் முடிவடைந்தது. இதையடுத்து, பட்ஜெட்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் கடந்த 2 நாட்களாக நடந்த விவாதத்துக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பதில் அளித்தார். 

அவரது பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், பிஜூ ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், நிதி மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனுடன் 2017-–2018–ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிறைவேற்றும் பணிகள், மக்களவையில் முடிவடைந்தது.

இதையடுத்து நிதி மசோதா, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நேற்று விவாதம் நடத்தப்பட்டது. இந்த மசோதாவில் சில திருத்தங்கள் செய்யும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மாநிலங்கள் அவையில், நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கும், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் ஆதார் கார்டு தொடர்பாக கடுமையாக வாக்குவாதம் நடந்தது.

கிரிக்கெட் வீரரர் தோனியின் ஆதார்கார்டு விவரங்கள் வெளியே கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம், ஆதார் கார்டின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிட்டது. எப்படிஅரசு ஆதார்கார்டின் நம்பகத்தன்மையை பாதுகாக்கப்போகிறது. அமெரிக்காவின் பென்டகனே ஹேக் செய்யப்பட்டுவிட்டது. நீங்கள் ஆதார் கார்டை யாரும் ஹேக் செய்யமாட்டார்கள் என்பதற்கான உறுதிமொழி என்ன இருக்கிறது என்று பேசினார்.

அதற்கு பதிலடி கொடுத்த நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பேசுகையில், “ ஆதார்கார்டு இல்லாமல் பென்டகன் ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம். ஆனால், இங்கு ஹேக்கிங் நடக்காது. ஏனென்றால், இங்கு ஆதார் இருக்கிறது” என்று பேசினார். இதைக்கேட்டவுடன் ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.பி.கள் மேஜையைத் தட்டி ஆதரவு தெரிவித்தனர். பின்னர் எதிர்க்கட்சிகளின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு அருண் ஜெட்லி பதிலளித்தார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

   இந்நிலையில், நிதி மோசதாவில் காங்கிரஸ் கொண்டு வந்த 3 திருத்தங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொண்டு வந்த 2 திருத்தங்கள் என மொத்தம் 5 திருத்தங்களை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.இதையடுத்து திருத்தங்களுடன் கூடிய நிதி மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்றதும் நடைமுறைக்கு வரும்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

அஸ்ஸாமை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற்ற காங்கிரஸ் சதி செய்தது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
MGNREGA மாற்றங்கள்: ஏழைகள், விவசாயிகள் மீதான தாக்குதல் - சோனியா காந்தி விமர்சனம்