உஷார்..! சாரிடான் மாத்திரை உள்பட 328 மருந்து, மாத்திரைகள் விற்பனைக்கு மத்திய அரசு தடை

Published : Sep 14, 2018, 01:27 PM ISTUpdated : Sep 19, 2018, 09:25 AM IST
உஷார்..! சாரிடான் மாத்திரை உள்பட 328 மருந்து, மாத்திரைகள் விற்பனைக்கு  மத்திய அரசு தடை

சுருக்கம்

சாரிடான் மாத்திரை உள்ளிட்ட 328 மருந்து மாத்திரைகள் உற்பத்தி, விற்பனைக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதில் வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்களின் மருந்துகளும் அடங்கும்.  

சாரிடான் மாத்திரை உள்ளிட்ட 328 மருந்து மாத்திரைகள் உற்பத்தி, விற்பனைக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதில் வெளிநாட்டு, உள்ாநாட்டு நிறுவனங்களின் மருந்துகளும் அடங்கும்.

பிக்சட் டிரக் காம்பினேஷன் வகை மருந்துகள் எனச் சொல்லப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளின் கலவை மருந்துகள் மூலம் தயாரிக்கப்பட்ட மாத்திரை மருந்துகளுக்கு இந்த தடை பொருந்தும். அதாவது செபிமிக்சின்+அசித்ரோமைசின், ஓபிளாக்சின்+ஆர்னிடாஜோல் சஸ்பென்சன், மெட்ரோநிடாஜோல்+நார்பிளாக்சின், பாராசிட்டமோல்+ப்போரபினாஜோன்+காபின் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன.

கடந்த ஜுலை மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நடத்திய ஆய்வில், நாட்டில் மக்களுக்கு அளிக்கப்படும் 349 வகை மருந்துகளில் 343 மருந்துகள் தடை செய்யப்பட வேண்டம், 6 வகை மருந்து, மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் 349க்கும் மேற்பட்ட மருந்துகள், மாத்திரைகளி்ன் பாதுகாப்பு, தரம், மனித உடலுக்கு தகுதியானதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுக்கும் உத்தரவிட்டது.

அந்த குழு ஆய்வு செய்து அறிக்கையை சமீபத்தில் அளித்தது அந்த அறி்க்கையி்ல் 328 மருந்துகளை தடை செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் 328 வகை மருந்துகள், மாத்திரைகள் விற்பனை, உற்பத்திக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதற்கு முன் சி.கே. கோகாடே தலைமையில் குழு அமைத்து தடை செய்யப்பட வேண்டிய மருந்துகள், மாத்திரைகள் குறித்துஆய்வு செய்ய அறிவுறுத்தியது. அப்போது, கோக்கடே அளித்த பரிந்துரையில் 344 வகை மருந்துகள், மாத்திரைகள் விற்பனைக்கும், உற்பத்திக்கும் தடை விதித்து கடந்த 2016, மார்ச் 10ந்தேதி உத்தரவிட்டது. இந்த மருந்துகளில் அதிகஅளவாக ஆன்டிபயோட்டிக் மருந்துகள் கலப்பதாக எழுந்த புகாரையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!