
செல்போன் கதிர்வீச்சால் இளைஞர்களுக்கு மூளைப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகள், தாவரங்களும்
செல்போன் கதிர்வீச்சால் பாதிக்கப்படுவதாக ஐஐடி பேராசிரியர் கிரிஷ்குமார் கூறியுள்ளார்.
செல்போன் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று சொல்லுமளவுக்கு நம் எல்லோர் வாழ்விலும் இரண்டறக் கலந்துவிட்டது. செல்போனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் வயது, பாலினத்துக்கு ஏற்றவாறு பல நோய்கள் உருவாகி வருகின்றன. செல்போன் கதிர்வீச்சால் மூளை அதிகம் பாதிக்கப்படுகிறது. இதன் மூலம் 20 சதவீதம் முதல் 60 சதவீதம்வரை நோய்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முதலில் மூளை பகுதியின் அருகில் உள்ள காது நரம்புகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் காது கேட்காமல் போகும் நிலை ஏற்படும் என்கின்றனர். மூளை பாதிக்கப்படுவதால், வயதானவர்களுக்கு வரும் ஞாபக மறதி, இளைஞர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தற்போது தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இன்று குழந்தைகள், சிறுவர்கள் கூட செல்போனைச் சாதாரணமாகப் பயன்படுத்துகின்றனர். பொதுவாக வளர்ந்த பிறகே மூளை முழு வளர்ச்சியை
அடையும். சிறுவர்கள், குழந்தைகளுக்கு மண்டையோடு மெல்லியதாகவே இருக்கும். இவர்கள் செல்போனைப் பயன்படுத்தினால் முதுமைக் காலத்தில் ஏற்படும் பல பாதிப்புகள் சிறு குழந்தைகளுக்கும் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
செல்போன்களின் கதிர்வீச்சால் ஏற்படும் விளைவுகளை நாம் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இது மறைமுக ஆபத்தை விளைவிக்கக் கூடியது. ஒரு
நாளைக்கு 30 நிமிடத்துக்குமேல் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது. தொடர்ச்சியாக செல்போன் பயன்படுத்தவதால், இளைஞர்களுக்கு மளைப்
புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மலட்டு தன்மை ஏற்படும் என்றும் கூறுகிறார்கள்.
செல்போன்களால் ஏற்படும் ஆபத்து குறித்து மத்திய அரசுக்கு மும்பை ஐஐடி பேராசிரியர் கிரிஷ்குமார் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். பேராசிரியர் கிரிஷ்குமார், உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகார் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டார். செல்போன் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகள் என்ற தலைப்பில் கருத்தரங்கில் அவர் பேசினார்.
அப்போது அவர், தொடர்ச்சியாக செல்போன்களை பயன்படுத்தும் இளைஞர்களுக்கு மூளை புற்றுநோய் ஏற்பட 400 சதவீதம் வாய்ப்பு உள்ளது. மேலும் அவர்களின் டி.என்.ஏ.விலும் பாதிப்பு ஏற்படும். இதை தவிர தூக்கமின்மை, மன அழுத்தம், நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உருவாகும் என்றும் கிரிஷ்குமார் பேசினார். செல்போன் கதிர்வீச்சு மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதிக்கப்படுவதாகவும் கிரிஷ்குமார் கூறியுள்ளார்.