
ஜூலை 1-ந்தேதி முதல் நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) அமலாகும் நிலையில், செல்போன் ரீசார்ஜ் கட்டணம், பிராட்பேண்ட் இன்டர்நெட் கட்டணம் ஆகியவற்றுக்கு செலுத்தும் பணத்தின் அளவும் அதிகரிக்க இருக்கிறது.
இதற்கு முன் 15 சதவீதம் சேவை வரியை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வசூலித்து வந்த நிலையில், ஜூலை 1-ந்தேதிமுதல் ஜி.எஸ்.டி. வரியில் 18 சதவீதம் வசூலிக்க இருக்கின்றன. இதனால், ஏறக்குறைய 3 சதவீதம் வரி உயர்வு அமலாகிறது.
ஜி.எஸ்.டி. வரி தொலைத்தொடர்பு சேவைகளுக்கு 18 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன் 15 சதவீதம் மட்டுமே இருந்தது.
இதன் தாக்கம் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
அதாவது நீங்கள் மாதம் ஆயிரம் ரூபாய் இன்டர்நெட் கட்டணம் செலுத்தினால், ஜூலை 1-ந்தேதிக்கு பின், ரூ.1030 ஆக செலுத்த வேண்டியது இருக்கும்.
அதேசபோல ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு டாக் டைம் குறைக்கப்படலாம் '' எனத் தெரிவித்தார்.