என்னை மன்னித்துவிடுங்கள்... நான் தோல்வியடைந்த தொழிலதிபர்... எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் உருக்கமான கடிதம் சிக்கியது..!

By vinoth kumarFirst Published Jul 30, 2019, 12:28 PM IST
Highlights

கஃபே காஃபி டே நிறுவனரும், முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த் நேற்று இரவு முதல் மாயமாகியுள்ளார். முன்னதாக, தான் மாயமாவதற்கு முன்பு சித்தார்த் தனது அனைத்து நிறுவனங்களுக்கும், ஊழியர்களுக்கும் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நான் யாரையும் ஏமாற்றவில்லை, நான் ஒரு தோல்வியடைந்த தொழிலதிபர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கஃபே காஃபி டே நிறுவனரும், முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த் நேற்று இரவு முதல் மாயமாகியுள்ளார். முன்னதாக, தான் மாயமாவதற்கு முன்பு சித்தார்த் தனது அனைத்து நிறுவனங்களுக்கும், ஊழியர்களுக்கும் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நான் யாரையும் ஏமாற்றவில்லை, நான் ஒரு தோல்வியடைந்த தொழிலதிபர் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் ஆளுநராக இருந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. இவரது மூத்த மகள் மாளவிகாவின் கணவர் சித்தார்த். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சித்தார்த் கேஃபி காஃபி டே என்ற காபி தூள் நிறுவனம் நடத்தி வந்தார். உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் இந்நிறுவனம் மிக பிரசித்தி பெற்றதாகும். இந்த நிறுவனத்தில் சுமார் 10,000 மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை பெங்களூருவில் இருந்து 375 கி.மீ. தொலைவில் மங்களூருவில் நேத்ராவதி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், அவர் நேற்று, கஃபே காஃபி டே நிர்வாகத்திற்கு எழுதிய கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், சித்தார்த், லாபகரமான தொழிலாக எடுத்துச்செல்ல முடியவில்லை என்றும், ஒரு மூத்த வருமான விரித்துறை அதிகாரியால் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் வருத்தம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

  

மேலும், சித்தார்த் எழுதியுள்ள அந்த கடிதத்தில், “37 வருடங்களுக்குப் பிறகு 30,000 நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி, சிறந்த முறையில் இருந்தபோதிலும், என்னால் சரியான லாபகரமான தொழிலாக எடுத்துச்செல்ல முடியவில்லை. என் மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவரையும் கைவிட்டதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். நான் நீண்ட காலமாக போராடினேன், ஆனால் இன்று என்னால் எந்த அழுத்தத்தையும் எடுத்துச்செல்ல முடியாததால் கைவிடுகிறேன். 

ஒரு தனியார் நிறுவன பங்குதாரர், நான் விற்ற பங்குகளை மீண்டும் வாங்கும்படி எனக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். நான் நீண்ட நாள்களாக அதனுடன் போராடி வருகிறேன். இதனால், என் நண்பர்களிடமிருந்து அதிக அளவிலான பணம் கடனாகப் பெற்றுள்ளேன். நான் கடன் வாங்கிய அனைவரும் தற்போது எனக்கு அழுத்தம் தரத் தொடங்கிவிட்டனர்.  என்று அவர் அந்த கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும், யாரையும் ஏமாற்ற வேண்டும் அல்லது தவறாக வழிநடத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. ஒரு தொழில்முனைவோராக நான் தோற்றுவிட்டேன், ஒருநாள் என்னை நீங்கள் புரிந்துகொள்வீர்கள், தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!