சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு... புதிய மதிப்பெண் திட்டத்தை தொடர முடிவு!

By vinoth kumarFirst Published Oct 8, 2018, 3:54 PM IST
Highlights

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பில், புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பில், புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வில் புதிய திட்டம் ஒன்றை சி.பி.எஸ்.இ. நடைமுறைப்படுத்த உள்ளது. இந்த புதிய மதிப்பெண் திட்டத்தின்படி, மாணவர்கள் எளிமையாக தேர்ச்சி பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. 

தற்போது பொது தேர்வில் 33 சதவிகிதம் மதிப்பெண்ணும், செயல்முறைத் தேர்வில், 33 சதவிகித மதிப்பெண்ணும் பெறுவது கட்டாயமாக உள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்படும் புதிய திட்டத்தின்படி, எழுத்துத்தேர்வு, செயல்முறைத் தேர்வு ஆகிய இரண்டிலும் சேர்த்து 33 சதவிகித மதிப்பெண் பெற்றாலே போதுமானது. சி.பி.எஸ்.இ.-ன் இந்த முடிவு லட்சக்கணக்கான மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சி.பி.எஸ்.இ.-ன் கீழ் இயங்கும், அனைத்து பள்ளிகளுக்கும் இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எழுத்து மற்றும் செயல்முறை தேர்வு என இரண்டிலும் 33 சதவிகித தேர்வு மதிப்பெண் பெற்றால் போதும் என்ற திட்டம் இந்தாண்டு மாணவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சி.பி.எஸ்.இ.-ன் இந்த தளர்வு நடவடிக்கையை அடுத்த ஆண்டுக்கும் நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும், மாணவர்களுக்கு இது நிம்மதியை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் இறுதியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்விப் பாடங்களும், மார்ச் மாதத்தில் முக்கிய பாடத் தேர்வுகளும் நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.

click me!