ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகள் மூன்று பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 294 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சிக்னல்கள் கோளாறு காரணமாக ரயில் விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே வாரியம் விளக்கம் அளித்திருந்தது. இந்த விபத்து குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட அதிகாரிகள் மூன்று பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சானாதனத்தை ஒழிக்க வேண்டும்: வலுக்கும் எதிர்ப்பு - உதயநிதி பதிலடி!
ரயில்வே ஊழியர்கள் அருண் குமார் மஹந்தா (சிக்னலுக்கான மூத்த பிரிவு பொறியாளராகப் பணிபுரிந்தார், பாலசோர்), முகமது அமீர் கான் (சிக்னலுக்கான மூத்த பிரிவு பொறியாளர், சோரோ) மற்றும் பப்பு குமார் (தொழில்நுட்ப நிபுணர், பாலசோர்) ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகையில் கொலை மற்றும் ஆதரங்களை அளித்தது போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
ரயில் விபத்து தொடர்பான வழக்கின் தொடர் விசாரணையில் புவனேஸ்வரில் உள்ள சிறப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மூவரும் கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
விசாரணையின் போது சேர்க்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், ஐபிசியின் பிரிவு 304 (பகுதி II), ஐபிசியின் 34r/w 201, ரயில்வே சட்டம், 1989 இன் 153 பிரிவு ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.