இன்று தொடங்கியது அதிரடி ஆஃபர்…. பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை….

First Published Dec 13, 2016, 8:45 AM IST
Highlights


இன்று தொடங்கியது அதிரடி ஆஃபர்…. பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை….

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என திரு.மோடி  அறிவித்ததையடுத்து, பணமில்லா பரிவர்த்தனைகளையும் ஊக்குவித்து வருகிறது,

இதன் ஒரு பகுதியாக, டெபிட், கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கினால் 0.75 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய நிதிஅமைச்சர் திரு. அருண்ஜேட்லி கடந்த டிசம்பர் 8-ம் தேதி அறிவித்தார். மேலும் ரயில்களில் சீசன் டிக்கெட் வாங்குவற்கு டெபிட் கார்டை பயன்படுத்தினாலும் 0.75 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.  

இந்நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு  நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. தள்ளுபடி செய்யபடும் பணம்  வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் 3 நாட்களுக்குள் வரவு வைக்கப்படும். 

இந்த அறிவிப்பு வெளியானது முதல் பொதுத் துறை பெட்ரோலிய விற்பனை நிறுவனங்கள் வங்கிகள் மற்றும் இ-வாலடுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது..
 

click me!