மகேந்திர சிங் தோனி மீது வழக்கு பதிவு… என்ன குற்றம் செய்தார் தெரியுமா?

Published : May 31, 2022, 05:48 PM IST
மகேந்திர சிங் தோனி மீது வழக்கு பதிவு… என்ன குற்றம் செய்தார் தெரியுமா?

சுருக்கம்

காசோலை மோசடி புகார் காரணமாக முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

காசோலை மோசடி புகார் காரணமாக முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு, டிஎஸ் எண்டர்பிரைசஸ் பெகுசராய் என்ற ஏஜென்சி, அதன் குறிப்பிட்ட தயாரிப்புகளில் ஒன்றை விற்பனை செய்வதற்காக புது டெல்லியில் உள்ள குளோபல் அப்கிரேட் இந்தியா என்ற உர நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. இந்த தயாரிப்புக்காக டிஎஸ் எண்டர்பிரைசஸ் பெகுசராய் ஏஜென்சி ரூ.36.81 லட்சத்தை குளோபல் அப்கிரேட் இந்தியா நிறுவனத்திற்கு செலுத்தியது. அந்த நிறுவனம் உரத்தை ஏஜென்சிக்கு அனுப்பியது. ஆனால் உறுதியளித்தபடி சந்தைப்படுத்தலுக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் ஏஜென்சியில் பொருட்கள் தேங்கியதாக கூறப்படுகிறது. மேலும் குளோபல் அப்கிரேட் இந்தியா நிறுவனம் ஒத்துழைக்காததால் நஷ்டம் ஏற்பட்டதாக டிஎஸ் எண்டர்பிரைசஸ் பெகுசராய் ஏஜென்சியின் உரிமையாளர் நீரஜ் குமார் நிராலா புகாரளித்தார்.

இந்த புகாரின் பேரில், ஏஜென்சியில் தேங்கிய உரத்தை குளோபல் அப்கிரேட் இந்தியா நிறுவனம் திரும்ப பெற்று, அதற்கு ஈடாக ரூ.30 லட்சத்திற்கான காசோலையை வழங்கியது. காசோலையை உரிமையாளர் வங்கியில் டெபாசிட் செய்தபோது, காசோலை பவுன்ஸ் ஆனது. இதுக்குறித்து தகவல் தெரிவித்தும் குளோபல் அப்கிரேட் இந்தியா நிறுவன அதிகாரிகளோ, பிரதிநிதிகளோ கவனம் செலுத்தவில்லை. ஏஜென்சி உரிமையாளரின் வக்கீல் காசோலை பவுன்ஸ் பற்றி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார்.  ஆனால் அதற்கும் பதிலளிக்காததால் சோர்வடைந்த நீரஜ் குமார் நிராலா, நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.

இந்த வழக்கில், நீரஜ் குமார் நிராலா சார்பில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷ் ஆர்யா, மாநிலத் தலைவர் அஜய் குமார், மார்க்கெட்டிங் தலைவர் அர்பித் துபே, எம்டி இம்ரான் ஜாபர், மார்க்கெட்டிங் மேலாளர் வந்தனா ஆனந்த், இயக்குநர் மகேந்திர சிங் உள்ளிட்டோர் 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பை தோனி விளம்பரம் செய்திருந்தார். இதனால் தோனி மீதும் நீரஜ் குமார் நிராலா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு பெகுசராய் சிஜேஎம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மேல் விசாரணையை மாஜிஸ்திரேட் அஜய் குமார் மிஸ்ராவுக்கு அனுப்பியது. இதனையடுத்து அவர் அடுத்த விசாரணையை வரும் ஜூன் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இருப்பதால் இந்த வழக்கு விவாதப்பொருளாக மாறியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

இன்றும் விமான ரத்துகள் இருக்கலாம்.. இண்டிகோவுக்கு டிஜிசிஏவின் அதிரடி நோட்டீஸ்! எப்போது சரியாகும்?
அதிர்ச்சி செய்தி! கோவா நைட் கிளப்பில் சிலிண்டர் வெடிப்பு – 23 பேர் பலியான சோகம்