ரூ.1000, ரூ.500 செல்லாது உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

Asianet News Tamil  
Published : Nov 10, 2016, 09:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
ரூ.1000, ரூ.500 செல்லாது உத்தரவை   எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

சுருக்கம்

புதுடெல்லி, நவ.10-

நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.1000, ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை முற்றிலும் கட்டுப்படுத்தி, ஒழிக்கும் வகையில், மத்திய அரசு தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.1000, மற்றும் ரூ.500 நோட்டுகளை செல்லாது என நேற்றுமுன்தினம் அறிவித்தது. இந்த ரூபாய்களை வைத்திருக்கும் பொதுமக்கள் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் கொடுத்து புதிய ரூ. 500, ரூ.2000 நோட்டுக்களாக மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவித்தது.

இந்த உத்தரவால் மக்களின் பணப்பரிவர்த்தனைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாமானிய மக்கள், நடுத்தரமக்கள் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் அல்லல்படுகின்றனர். நடுத்தர வர்கத்து மக்கள் கையில் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி செலவு ெசய்ய முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்தநிலையில் மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சங்கம் லால் பாண்டே என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு தன்னிச்சையாக அறிவித்துவிட்டது. இந்த உத்தரவால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி,  வருகின்றனர். டிசம்பர் இறுதிவரை பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதம் என்பது, பண்டிகைகள், திருமணம் நடக்கும் மாதம். அப்போது இதுபோல் சவுகரியக்குறை இருந்தால், மக்கள் பெரும் பாதிப்படைவார்கள். ஆதலால்,மத்தியஅரசு அவசரகதியில் பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.மக்களின் பாதிப்பைக் கருதி இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்தமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுஇன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

ஜாக்கிரதை.! உங்கள் செல்போன் சிக்னல் துண்டிக்கப்படலாம்? LPG தட்டுப்பாட்டால் முடங்குகிறதா இந்திய டெலிகாம் துறை?
WFH Start: இனி ஆபீஸ் போக வேண்டாம்! மீண்டும் வருகிறது வொர்க் ஃபிரம் ஹோம்! அடுத்தடுத்து உத்தரவிடும் நாடுகள்.!