தலைக்குப்புற கார் கவிழ்ந்து விபத்து... பாஜக எம்.பி படுகாயம்..!

Published : Nov 10, 2019, 02:55 PM IST
தலைக்குப்புற கார் கவிழ்ந்து விபத்து... பாஜக எம்.பி படுகாயம்..!

சுருக்கம்

உத்தரகாண்டில் பாஜக எம்.பி. சென்ற கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தீரத் சிங் ராவத் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உத்தரகாண்டில் பாஜக எம்.பி. சென்ற கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தீரத் சிங் ராவத் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உத்தரகாண்ட் மாநிலம் கார்வால் தொகுதியின் பாஜக எம்.பி.யாக இருந்து வருபவர் தீரத் சிங் ராவத். இவர் தனது காரில் இன்று காலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, பீம்கோடா பன்ட் தீப் சாலையில் சென்றிக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காருக்குள் இருந்த எம்.பி. தீரத் சிங் ராவத் படுகாயமடைந்தார். உடனே அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் 
ஹரித்வாரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!