ராமனுக்காக நிற்பேன்... 92 வயதில் அயோத்தி வழக்கில் நெருப்பை கக்கிய தமிழக வழக்கறிஞர்... ஆடிப்போன தலைமை நீதிபதி..!

By vinoth kumarFirst Published Nov 10, 2019, 1:02 PM IST
Highlights

வழக்கறிஞர் நின்று வாதிடுவதுதான் முறை. என் ராமனுக்காக நிற்பேன். நிற்க இயலாது போனால் நீதிமன்றம் வருவதை நிறுத்திக் கொள்வேன்” என்று சொல்லி, 92 வயதிலும் நின்றுகொண்டே வாதாடினார். இந்த வழக்கில் அவர் ஒரு ரூபாய்கூட ஊதியம் பெற்றுக்கொள்ளவில்லை. இதுவே தனது கடைசி வழக்கு என்றும் அறிவித்திருந்தார். நான் இறப்பதற்கு முன் எனது கடைசி ஆசை, இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான வழக்கில் 92 வயதான தமிழகத்தை சேர்ந்த முதுபெரும் வழக்கறிஞர் கே.பராசரன் ரூபாய்கூட ஊதியம் வாங்காமல் நின்று கொண்டே வாதாடியுள்ளார்.

பல ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி நில சர்ச்சை வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த 40 நாட்கள் விசாரணை நடைபெற்று நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ‘அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலமாக கருதப்பட்ட 2.77 ஏக்கர் நிலமும் இந்துக்களுக்கு சொந்தமானது. அங்கு ராமர் கோயில் கட்டலாம். இஸ்லாமிய அமைப்புகளுக்கு அயோத்தியில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும். கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதத்தில் அமைக்க வேண்டும்’ என்று  உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், இஸ்லாமிய அமைப்புகள் மசூதி கட்டுவதற்காக அயோத்திலேயே முக்கியமான இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இந்த வழக்கில் அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான வழக்கில் ராம்லல்லா சார்பில் வாதாடியவர்களில் 92 வயதான முதுபெரும் வழக்கறிஞர் கே.பராசரன் முக்கியமானவர். ஒரு நாள் இந்த வழக்கு விசாரணையின் போது அவரிடம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “உங்கள் வயதுக்கு மதிப்பளித்துச் சொல்கிறேன். ஒரு நாற்காலி போடச் சொல்கிறேன். அமர்ந்து வாதங்களைச் சொல்லுங்கள்” என்றார்.

அதற்கு, “வழக்கறிஞர் நின்று வாதிடுவதுதான் முறை. என் ராமனுக்காக நிற்பேன். நிற்க இயலாது போனால் நீதிமன்றம் வருவதை நிறுத்திக் கொள்வேன்” என்று சொல்லி, 92 வயதிலும் நின்றுகொண்டே வாதாடினார். இந்த வழக்கில் அவர் ஒரு ரூபாய்கூட ஊதியம் பெற்றுக்கொள்ளவில்லை. இதுவே தனது கடைசி வழக்கு என்றும் அறிவித்திருந்தார். நான் இறப்பதற்கு முன் எனது கடைசி ஆசை, இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அயோத்தி வழக்கின் நியாயமான தீர்ப்புக்கு உறுதுணையான தெளிவான, உறுதியான வாதங்களை கே.பராசரன் முன்வைத்த போது, உடன் பக்கபலமாக வாதாடினார் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன். இவர் வழக்கு நடைபெற்ற 40 நாட்களும் காலணி அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!