3 மாதத்தில் திட்டங்களை வகுக்க வேண்டும்..! அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு..!

By Manikandan S R SFirst Published Nov 9, 2019, 11:49 AM IST
Highlights

அயோத்தி நில உரிமை இந்துக்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் அடுத்த மூன்று மாதத்திற்குள் மத்திய அரசு இதுதொடர்பாக திட்டம் ஒன்றை வகுத்து மேற்கொண்டு செய்ய வேண்டியதை முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். 
 

பரபரப்பான அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியது. தீர்ப்பில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயோத்தி நில உரிமை இந்துக்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் அடுத்த மூன்று மாதத்திற்குள் மத்திய அரசு இதுதொடர்பாக திட்டம் ஒன்றை வகுத்து மேற்கொண்டு செய்ய வேண்டியதை முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். 

மேலும் முஸ்லீம்களுக்கு ஐந்து ஏக்கருக்கு குறையாமல், அயோத்தியிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். தீர்ப்பில் ராமர் கோவில் கட்ட தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்துக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் நாடு முழுவதும் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
 

click me!