சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு கொடுத்த கேன்சர் பாதித்த பிச்சைக்காரர்... முதியவருக்கு குவியும் பாராட்டு!

By sathish kFirst Published Sep 4, 2018, 6:13 PM IST
Highlights

கேரளத்திற்காக மக்கள் கொடுக்கும் எந்த ஒரு சிறிய தொகையும் கூட இப்போது பெரிய தொகையாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் கேரளாவை சேர்ந்த ஒரு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிச்சைகாரர் செய்திருக்கும் செயல் அப்பகுதி மக்களை நெகிழச்செய்திருக்கிறது. 

கேரள மாநில சமீபத்தில் சந்தித்த மழைவெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நாலா பக்கமும் இருந்து நிவாரண உதவிகள் வந்து குவிந்தாலும் அது கேரளத்தை மறுசீரமைக்க போதுமானதாக இல்லை. அந்த அளவிற்கு பெருத்த சேதத்தினை சந்தித்திருக்கிறது கேரளம். கேரளத்திற்கு ஏற்பட்டிருக்கும் இந்த பேரதிர்ச்சியை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்திருந்தாலும் கொடுத்திருக்கும் நிவாரணத்தொகை அந்த பேரிடரால் ஏற்பட்டிருக்கும் இழப்புகளை சரி செய்ய போதுமானதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனாலும் கேரளாவிற்கு மக்கள் தரப்பில் இருந்து உதவிகள் இன்னமும் வந்து கொண்டுதான் இருக்கிறது. முகாம்களில் இருக்கும் பலருக்கு திரும்பி செல்வதற்கு வீடு கூட இல்லை. நிலச்சரிவினால் பலரின் வீடுகள் இடிந்து தரைமட்டமாகிவிட்டது. இந்நிலையில் கேரளாவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர கடும் முயற்சி மேற்கொண்டிருக்கிறது கேரள அரசு. 

கேரளத்திற்காக மக்கள் கொடுக்கும் எந்த ஒரு சிறிய தொகையும் கூட இப்போது பெரிய தொகையாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் கேரளாவை சேர்ந்த ஒரு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிச்சைகாரர் செய்திருக்கும் செயல் அப்பகுதி மக்களை நெகிழச்செய்திருக்கிறது. 

இந்நிலையில் வெள்ள நிவாரண நிதிக்கு குஜராத் மாநிலத்தை சேர்ந்த 70 வயது முதியவர் செய்த உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள மெஹ்சானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிம்ஜி பிரஜாபதி. வயது 70. நடக்க முடியாத இவர், கம்புகளை ஊன்றிக்கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்தார். நேராக ஆட்சித் தலைவரைச் சந்தித்தவர் தன்னிடம் இருந்த ரூ.5000 ரூபாயை அவரிடம் கொடுத்தார். பிறகு, இதை கேரள நிவாரண நிதிக்கு கொடுக்கிறேன், பெற்றுக்கொள்ளுங்கள் என்று கொடுத்தார். 

இதைக் கண்டு ஆட்சித் தலைவர் உட்பட அங்கிருந்தவர்கள் அனைவருக்கும்  ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏனென்றால் பிரஜாபதி, ஒரு பிச்சைக்காரர்.  அதஊமட்டுமல்ல  கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர சிகிச்சை எடுத்து வருகிறார். சீரியசான நிலையில் இருக்கும் அவருக்கு, உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நிவாரண உதவித் தொகை வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘மழை வெள்ளத்தால் கேரளா மாநிலம் முழுவதுமாக பாதிப்படைந்துவிட்டது என்று கேள்விபட்டேன். அந்த மாநிலத்துக்கு குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்கள் உதவி வருவதை அறிந்தேன். நானும் ஏதாவது உதவ வேண்டும் என்று நினைத்தேன். நான் பிச்சை எடுத்து சேமித்த ஐந்தாயிரம் ரூபாயை நிவாரண உதவிக்கு வழங்கி இருக்கிறேன் என்றார். தன்னலமற்ற அன்புக்கு உதாரணம் இவர். கேன்சரால் பாதிக்கப்பட்ட ஒரு பிச்சைக்காரரின் தியாகமும் சமூகத்தின் மீதான பக்தியும் பாரட்டப்பட வேண்டியது என்றார் மாவட்ட ஆட்சித் தலைவர்.

பிரஜாபதி, இதற்கு முன்பு தான் பிச்சை எடுத்து சேர்த்த பணத்தை கொண்டு ஏழை சிறுமிகளின் படிப்பை ஊக்குவிக்கும் விதமாக 10 தங்கத் தோடுகளை பரிசளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று மாதத்துக்கு முன்புதான் பிரஜாபதிக்கு வயிற்றில் கேன்சர் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ராஜ்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் மனித நேயத்தை பாராட்டி, சில கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல்கட்ட சிகிச்சைக்கு ரூ. 70 ஆயிரத்தைக் கொடுத்தது. அவருக்கு சூரத்தை சேர்ந்த ஒரு குடும்பம் ரூ. 30 ஆயிரம் கொடுத்துள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சி தலைவர் ஹர்ஷத் வோரா, பிரஜாபதிக்கு ஆயுர்வேத சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய இருப்பதாக முடிவு செய்துள்ளார்.

click me!