Breaking: ஜம்மு காஷ்மீரில் தீப்பிடித்து எரிந்த யாத்ரீகர்கள் பேருந்து .. 4 பேர் பலியானதால் பரபரப்பு!!

Published : May 13, 2022, 05:31 PM ISTUpdated : May 13, 2022, 06:11 PM IST
Breaking: ஜம்மு காஷ்மீரில் தீப்பிடித்து எரிந்த யாத்ரீகர்கள் பேருந்து .. 4 பேர் பலியானதால் பரபரப்பு!!

சுருக்கம்

ஜம்மு காஷ்மீரில் பேருந்து தீப்பிடித்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்மு காஷ்மீரில் பேருந்து தீப்பிடித்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் கத்ராவிலிருந்து ஜம்மு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது கத்ராவிலிருந்து 1.5 கிமீ தொலைவில் உள்ள கர்முல் அருகே பேருந்து தீப்பிடித்து எரிந்தது. கத்ராவில் யாத்ரீகர்களுடன் சென்ற பேருந்து திடிரென தீப்பிடித்ததில் 4 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்தனர்.

இதுக்குறித்த முதற்கட்ட விசாரணையில், என்ஜின் பகுதியில் இருந்து தீ பரவியதால் பஸ் முழுவதும் எரிந்ததும் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது. மேலும் 22 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக கத்ரா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதுக்குறித்து அப்பகுதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!
சாவு எப்படியெல்லாம் வரும் பார்த்தீங்களா! நியூயார்கில் இந்திய மாணவி உயிரி**ழப்பு! நடந்தது என்ன?