"இப்படி எல்லாம் பஸ் ஓடினா எதுக்கு டீசல், பெட்ரோல்…" : 17 கிமீக்கு வெறும் ஒரு ரூபாய்தான் செலவாம்…

First Published Apr 1, 2017, 3:18 PM IST
Highlights
bus travel for one rupee


டீசல் விலை ஏறிப்போச்சு, பெட்ரோல் விலை கூடிப்போச்சு என்றெல்லாம் இனிமேல் புலம்பத் தேவையில்லை. மேற்குவங்காள மாநிலத்தில் வித்தியாசமான முறையில் ஒரு நிறுவனம் பஸ்ஸை இயக்கியுள்ளது. 

ஒரு ரூபாய் செலவு

மாட்டு சானத்தின் மூலம் எடுக்கப்பட்ட ‘பயோகியாஸ்’சைப் பயன்படுத்தி  தனியார் நிறுவனம் ஒன்று கொல்கத்தாவில் பஸ்ஸை இயக்கி சாதனை படைத்துள்ளது. இந்த எரிவாயு மூலம் பஸ்ஸை  17 கி.மீ.க்கு இயக்க வெறும்  ஒரு ரூபாய் மட்டுமே செலவாகியுள்ளது. 

பிரத்யேக பஸ்

கொல்கத்தாவைச் சேர்ந்த ‘போனிக்ஸ் இந்தியா ஆய்வு மற்றும் மேம்பாட்டு’ நிறுவனம் சார்பில் இந்த பஸ் இயக்கப்பட்டது. இதற்காக இந்த நிறுவனம் ‘அசோக் லேலாண்ட்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, சாண எரிவாயுவில் ஓடுவதற்காக பிரத்யேக பஸ்ஸை தயாரித்தது.

இந்நிலையில், கொல்கத்தாவின் உல்டாடங்கா பகுதியில் இருந்து காரியா பகுதி வரை நேற்று முன் தினம் முதல்முறையாக சான எரிவாயுவினால் பஸ் இயக்கப்பட்டது. 

 

சமையல், மின்சாரம்

இந்த பஸ் இயக்கியது குறித்து ‘போனிக்ஸ் இந்தியா ஆய்வு மற்றும் மேம்பாட்டு’ நிறுவனத்தின் தலைவர் ஜோதி பிரகாஷ் தாஸ் கூறுகையில், “ மேற்குவங்காளத்தின் பிர்பும் மாவட்டத்தில் எங்கள் நிறுவனத்தில் இருந்து சான எரிவாயுவை தயாரிக்கிறோம். மாட்டுசானத்தில் மட்டுமல்லாது, காய்கறிக்கழிவு ஆகியவற்றில் இருந்து மீத்தேன் வாயுவைத் தயாரிக்கலாம். இந்த வாயு மாசு இல்லாதது, இந்த வாயுவைப் பயன்படுத்தி, வாகனங்களை இயக்கலாம், சமையல் செய்யலாம், மின்சாரமும் உற்பத்தி செய்யமுடியும். 

ரூ.20 உற்பத்தி செலவு

இந்த வாயு ஒரு கிலோ தயாரிக்க எங்களுக்கு ரூ. 20 செலவாகிறது. ஒரு கிலோ எரிவாயு மூல் 5 கி.மீ. வரை பஸ்ஸை இயக்கலாம். கொல்கத்தாவில் டீசலில் 17 கி.மீ.க்கு பஸ்ஸை இயக்க ரூ.12 செலவாகிறது. நாங்கள் தயாரிக்கும் இந்த எரிவாயு மூலம் பஸ்ஸை 17 கி.மீக்கு இயக்க வெறும்  ஒரு ரூபாய் மட்டுமே செலவாகும்.

நாங்கள் தயாரிக்கும் இந்த எரிவாயுவை வர்த்தக ரீதியாக விற்பனை செய்ய 100 விற்பனை நிலையங்கள் அமைக்க அரசிடம் அனுமதி பெற்றுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்கும் 15-க்கும் மேல்பஸ்களை சான எரிவாயு மூலம் இயக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். 

டீசலைத் தவிர்க்கலாம்

15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களை சாலையில் ஓட்டத் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வாகனங்களை வைத்து இருக்கும் உரிமையாளர்கள் டீசல் எஞ்சினை மாற்றிவிட்டு பயோ-கியாஸ் மூலம் இயங்கும் எஞ்சினை பொருத்தலாம்’’ என்று தெரிவித்தார். 

பசுக்களை எதற்காக காக்கிறோம்?

பசுக்களைக் காக்கவும், பசு கடத்தலை தடுக்கவும், மாட்டிறைச்சியை தடை செய்தும் பல்வேறு மாநிலங்களில் உள்ள பாரதிய ஜனதா அரசுகள் சட்டம் இயற்றி வருகின்றன. அந்த மாடுகளின் சானத்தை பயன்படுத்தி, இது போல் பயோ-கியாஸ் உற்பத்தி செய்தால், மாடுகளை பாதுகாப்பதில் ஒரு அர்த்தம் இருக்கும்.

click me!