சிம்லாவில் கோர விபத்து : பேருந்து கவிழ்ந்து 20 பேர் பலி..

 
Published : Jul 20, 2017, 11:04 AM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
சிம்லாவில் கோர விபத்து : பேருந்து கவிழ்ந்து 20 பேர் பலி..

சுருக்கம்

bus accident killed 20 in simla

இமாச்சல் பிரதேசம் மாநிலம், சிம்லா அருகே பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 20 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

கின்னாவூர் மாவட்டத்தில் இருந்து சோலன் மாவட்டத்துக்கு இன்று காலை பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்துக்குள் கவிழ்ந்து விழுந்தது. இதில் பயணம் செய்த 20 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயமடைந்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பேருந்து விபத்து ஒன்றில் 44 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

இஸ்ரோவின் 'பாகுபலி' ராக்கெட் சாதனை! வெயிட்டான சாட்டிலைட் வெற்றிகரமாக ஏவப்பட்டது!
ரூ.1 லட்சத்துக்கு காண்டம், ரூ.4 லட்சத்துக்கு நூடுல்ஸ்.. 2025ல் இந்தியர்கள் செய்த வினோத ஆர்டர்கள்!