கூட்டம் கூட்டமாக கிளம்புறாங்க…92 ஆயிரம் பேர் விஆர்எஸ் திட்டத்தில் விருப்பம்: காலியாகிறதா பிஎஸ்என்எல் ....

By Selvanayagam PFirst Published Dec 4, 2019, 10:16 PM IST
Highlights

பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களை சேர்ந்த சுமார் 92 ஆயிரம் பணியாளர்கள் விருப்ப ஓய்வு வேண்டி (வி.ஆர்.எஸ்.) அப்ளை செய்துள்ளனர். இதனால் அந்நிறுவனங்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ஆண்டுக்கு சுமார் ரூ.8,700 கோடி மிச்சமாகும் என தகவல்.    

தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் மத்திய அரசுக் சொந்தமான  பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. தனது ஊழியர்களுக்கு சம்பளம் போடவே அவை படாதபாடு பட்டு வருகிறது. 

இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனியாருக்கு விற்கப்படுமோ என்ற அச்சம் நிலவியது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனியாருக்கு விற்கப்படாது என மத்திய அரசு அறிவித்தது. 

மேலும் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கையில் களம் இறங்கியது.
அதன் ஒரு பகுதியாக, ரூ.30 ஆயிரம் கோடி பேக்கேஜ் விருப்ப ஓய்வு திட்டத்தை (வி.ஆர்.எஸ்.) கொண்டு வந்தது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் சுமார் 1.6 லட்சம் பேரும், எம்.டி.என்.எல். நிறுவனத்தில் 18,400 பேரும் பணியாற்றி வருகின்றனர். 

வி.ஆர்.எஸ்.க்கு அப்ளை செய்வதற்காக கடைசி நாள் நேற்றுடன் முடிவடைந்தது. இதுவரை அந்த நிறுவனங்களை சேர்ந்த மொத்தம் 92 ஆயிரம் பணியாளர்கள் வி.ஆர்.ஆஸ்.க்கு அப்ளை செய்துள்ளதாக அந்நிறுவனங்களின் தலைமை நிர்வாக இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் பிரவின் குமார் புர்வார் கூறுகையில், வி.ஆர்.எஸ். திட்டம் நாங்கள் எதிர்பார்த்த மாதிரி அமைந்தது. ஊழியர்கள் குறைப்பு பிறகு ஆண்டுக்கு சுமார் ரூ.7 ஆயிரம் கோடி மிச்சமாகும் என தெரிவித்தார். 

எம்.டி.என்.எல். நிறுவன தலைமை நிர்வாக இயக்குனர் இது குறித்து கூறுகையில், தற்போது நிறுவனத்தின் 18,400 பணியாற்றி வருகின்றனர். வி.ஆர்.எஸ். திட்டம் நிறைவேற்றப்பிறகு அது 4,300ஆக குறைந்து விடும். மேலும் நிறுவனத்தின் சம்பள செலவினமும் ரூ.2,272 கோடியிலிருந்து ரூ.500 கோடியாக குறைந்து விடும் என தெரிவித்தார். வி.ஆர்.எஸ். நடைமுறைகள் அடுத்த மாதம் இறுதிக்குள் முடிந்து விடும் எதிர்பார்க்கப்படுகிறது.

click me!